முகப்பு /செய்தி /இந்தியா / ஐ.நாவில் நேரலை முதல் பிரபலங்கள் பங்கேற்பு வரை... சர்வதேச முக்கியத்துவம் பெற்ற 100வது 'மன் கி பாத்’ நிகழ்ச்சி

ஐ.நாவில் நேரலை முதல் பிரபலங்கள் பங்கேற்பு வரை... சர்வதேச முக்கியத்துவம் பெற்ற 100வது 'மன் கி பாத்’ நிகழ்ச்சி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Mann Ki Baat 100th Episode | பிரதமர் மோடி 100 ஆவது தொகுப்பில் பேச இருப்பதை கேட்க, உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 • Last Updated :
 • Delhi, India
top videos

  பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயம் இன்று ஒலிபரப்பாகிறது. பிரதமர் மோடி 100 ஆவது தொகுப்பில் பேச இருப்பதை கேட்க, உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்தவகையில் மன் கி பாத் நிகழ்ச்சியின் கடந்த வந்த பாதை மற்றும் 100வது அத்தியாயத்தின் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பார்ப்போம்!

  கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மனதின் குரல் என்ற பெயரில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வானொலி வாயிலாக உரையாற்றினர். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கும் தனது உரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் வானொலி ஊடகத்தை பிரதமர் தேர்வு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு நாட்டு மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
  இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமை பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பானது. இதுவரை 99 அத்தியாயங்கள் ஒலிபரப்பாகி உள்ளன. இதில், பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்கள் மற்றும் நாட்டிற்கு பங்களித்த எளிய மக்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் விரிவாகப் பேசி வருகிறார்.
  கடந்த 99 தொகுப்புகளில் தமிழ்நாடு குறித்தே பிரதமர் மோடி அதிகம் பேசி உள்ளார். குறிப்பாக தமிழ் இலக்கியம் மற்றும் மொழியின் ஆழம் குறித்து நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு தகவல்களை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். தமிழ் மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களின் சாதனைகளையும் பிரதமர் மோடி பல முறை நாட்டு மக்களிடம் பகிர்ந்துள்ளார்.
  மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயத்தை நாட்டு மக்கள் இன்று கேட்க உள்ளனர். இதனை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாக உள்ளது.
  100வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த், இளையராஜா உட்பட பல்வேறு துறை சார்ந்த 200 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலும் ஆளுநர் மாளிகையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயத்திற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
  மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள இந்தியா கேட்டில் மன் கி பாத்தின் 100 ஆவது தொகுப்பை விவரிக்கும் வகையில் சிறப்பு காட்சிகளுடன் வண்ண விளக்குகள் ஒளிர்ந்தன.
  மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது தொகுப்பை சிறப்பிக்கும் வகையில், 100 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய நிதித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் புகழ்பெற்றுள்ளது. தற்போது 11 வெளிநாட்டு மொழிகளில் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
  இந்நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயத்தை அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திலும் மோடியின் 100 ஆவது மனதின் குரல் உரையை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  பிரதமர் மோடிக்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் சுகாதாரம், பெண்களின் பொருளாதார மேம்பாடு, நிலையான வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி ஊக்கமளித்தாக பில் கேட்ஸ் புகழாரம் சூட்டினார். இந்நிலையில், பிரதமர் மோடி 100 ஆவது தொகுப்பில் பேச இருப்பதை கேட்க, உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விலி பார்லே பகுதியில் மன் கி பாத்தின் 100-வது நிகழ்ச்சில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ளார். அதேபோல, கன்டிவாலி பகுதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார்.
  First published:

  Tags: Mann ki baat, PM Modi