முகப்பு /செய்தி /இந்தியா / ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன்...

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன்...

சத்யபால் மாலிக்

சத்யபால் மாலிக்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

காப்பீடு மோசடி வழக்கில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரு நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு 2,200 கோடி ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

இதில் மோசடி நடைபெற்றதாகக் கூறி இரு வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சத்யபால் மாலிக், காப்பீடு வழக்கில் சிபிஐ சில விளக்கங்களை கேட்டுள்ளதாகவும், அதுகுறித்து தான் பதிலளிப்பேன் என கூறியுள்ளார்.

top videos

    காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் போது, வீரர்களுக்கு விமான வசதி செய்து தரப்படவில்லை என சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார். இதன் பின்னணியில் சிபிஐ அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுகிறது.

    First published: