டெல்லி கலால் வரி கொள்கை முறைகேட்டு புகார் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் மத்திய புலனாய்வுப் பிரிவு இன்று விசாரணை நடத்தியது.
2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி கலால் வரி கொள்கையில் வரம்பு மீறப்பட்டுளளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுக்க டெல்லி துணை நிலை ஆளுநர் வி கே சக்சேனா உத்தரவிட்டார். இதையடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதில், 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். குற்றவாளிகளில் ஒருவராக, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா சேர்க்கப்பட்டார்.
முன்னதாக, சிபிஐ இவருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, மேலும் ஒரு பண மோசடி வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத் துறை திகார் சிறைக்குள் வைத்தே கைது செய்தது.
இந்நிலையில், கலால் வரி கொள்கை வரம்பு மீறல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து, இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் கெஜ்ரிவால் பங்கு கொண்டார்.
கட்டாயம் வாசிக்க: தமிழ்நாடு வழியில் டெல்லி அரசும் தீர்மானம் - ஆளுநர் விவகாரம் தொடர்பாக ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கடிதம்
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளும் மத்திய அரசு ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கிறது. ஆனால், மக்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள். இந்த வழக்கு முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலமாக பழிவாங்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றச்சாட்டினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arvind Kejriwal