முகப்பு /செய்தி /இந்தியா / பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவிடம் சிபிஐ விசாரணை...

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவிடம் சிபிஐ விசாரணை...

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

  • Last Updated :
  • Bihar, India

ரயில்வே பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை இன்று (25.03.2023) மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத், ரயில்வே பணியில் சேர விரும்புவோர், தங்களது சொத்துகளை எழுதித் தர வேண்டும் என்று நிர்ப்பந்தித்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, லாலு பிரசாத், ராப்ரி தேவி, அவர்களது மகள் மிசா பாரதி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவிற்கு சிபிஐ-ம், அவரது சகோதரி மிசா பாரதிக்கு அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பி இருந்தன.

Also Read : எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் : 2024 தேர்தலில் களம் காண்பாரா ராகுல்?

அதன் பேரில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரான தேஜஸ்வி யாதவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான மிசா பாரதியிடமும் விசாரணை நடைபெற்றது.

First published:

Tags: Bihar, CBI