முகப்பு /செய்தி /இந்தியா / 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்படும் காலிஃப்ளவர் பக்கோடா..! - மேற்கு வங்கத்தில் சுவாரஸ்யம்!

50 பைசாவிற்கு விற்பனை செய்யப்படும் காலிஃப்ளவர் பக்கோடா..! - மேற்கு வங்கத்தில் சுவாரஸ்யம்!

காலிஃப்ளவர்

காலிஃப்ளவர்

உணவு பிரியவர்களின் கூற்றின் படி, இந்த ஃபுலுரி எனப்படும் காலிஃப்ளவர் பக்கோடா, அங்கு உள்ள பல்வேறு கடைகளிலும் கிடைக்கிறது. ஆனால் ஒவ்வொரு கடைகளிலும் இவற்றின் சுவையானது மாறுபடும். மேலும் அதற்கேற்றபடி இதன் விலையும் மாறுபடுகிறது.

  • Last Updated :
  • West Bengal, India

மேற்கு வங்கத்தை சேர்ந்த ஷாந்திபூரில் வெறும் 50 பைசாவிற்கு ஃபுலுரி என அழைக்கப்படும் காலிஃப்ளவர் பக்கோடா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேற்கு வங்கத்தின் நாடியாவில் உள்ள ஷாந்திபுர் எனும் பகுதியில் தான் 50 பைசாவிற்கு காலிஃப்ளவர் பக்கோடா விற்பனை செய்யப்படுகிறது. சாந்திபூரில் குலாப் ஸ்மோர் எனும் குறிப்பிட்ட பகுதியில் இந்த கடையானது செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள வேறு சில கடைகளிலும் 50 பைசாவிற்கு காலிஃப்ளவர் பக்கோடா விற்பனை செய்யப்படுகிறது.

மாலை நேரம் நெருங்கி விட்டாலே மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த பகுதிகளில் குழுமி பல்வேறு சீன உணவு வகைகளையும், மீன் வருவல் மற்றும் மட்டன் கபிராஜ், காபுல் ரோல், கட்லெட், பிரியாணி போன்ற உணவு வகைகளை சுவைப்பதற்கு குழுமி விடுகின்றனர். மேலும் சிலரோ இங்கு கிடைக்கும் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து செய்யப்படும் அரிசி சாதத்தை சுவைப்பதற்காகவும் இங்கு குழுமி விடுகின்றனர்.

ஆனால் எத்தனை உணவு வகைகள் இருந்தாலுமே 50 பைசாவிற்கு விற்கப்படும் இந்த காலிஃப்ளவர் பக்கோடாவிற்கு என தனி மவுசு உள்ளது. குறிப்பாக மான்சா பூஜை அல்லது கங்கா பூஜை போன்ற சிறப்பு நாட்களிலும், சனி மற்றும் செவ்வாய் போன்ற நாட்களிலும் இங்கு அதிக அளவில் காலிஃப்ளவர் பக்கோடாவானது விற்பனையாகும். குறிப்பாக சாந்திபூரில் விற்கப்படும் காலிஃப்ளவர் பக்கோடா மற்ற பகுதியில் இருக்கும் பக்கோடாக்களைவிட மிகவும் சுவை மிகுந்ததாக இருப்பதாக அங்கு இருப்பவர்கள் கூறுகின்றனர்.

Read More : மம்தா கொடுத்த யோசனை..! ரசகுல்லா முதல் தயிர் வரை அனைத்திலும் மாம்பழத்தின் சுவை..! அசத்தும் வியாபாரிகள்..

உணவு பிரியவர்களின் கூற்றின் படி, இந்த ஃபுலுரி எனப்படும் காலிஃப்ளவர் பக்கோடா, அங்கு உள்ள பல்வேறு கடைகளிலும் கிடைக்கிறது. ஆனால் ஒவ்வொரு கடைகளிலும் இவற்றின் சுவையானது மாறுபடும். மேலும் அதற்கேற்றபடி இதன் விலையும் மாறுபடுகிறது. சில கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு காலிஃப்ளவர் பக்கோடா விற்பனை செய்யப்படுகிறது சில கடைகளில் இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, வேறு சில கடைகளிலோ மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

top videos

    ஆனால் இவை எல்லாவற்றையும் விட 50 பைசாவிற்கு விற்கப்படும் காலிஃப்ளவர் பக்கோடா தான் மிகவும் சுவை மிகுந்ததாக உள்ளது. தற்போது அதிக அளவில் இந்த 50 பைசா பக்கோடா விற்பனை செய்வதை பார்க்க முடியவில்லை என்றாலும் கூட, சில கடைகளில் இவை தற்போதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சாந்திப்பூரில் அந்தப் பகுதியில் கடி வைத்துள்ள ஒருவர் கூறுகையில், இந்த காலிஃப்ளவர் பக்கோடாவினால் எங்களுக்கு அதிக லாபம் கிடைக்கவில்லை என்றாலும் கூட, இவற்றை விற்பதே எங்கள் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. மேலும் அந்த பக்கோடாவானது கரம் மசாலா, மிளகாய், இஞ்சி போன்ற பல்வேறு மூல பொருட்களை சேர்த்து தயார் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

    First published:

    Tags: Trending