இயற்கை எப்போதுமே புதிர் நிறைந்த ஒன்று தான். ஒரு சில நேரங்களில் இயற்கை நிகழ்த்தும் அதிசயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறது. அறிவியல் முன்னேற்றங்கள் அடைந்திருந்தாலும், ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்படாத பல இயற்கை சார்ந்த மர்மங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.
உதாரணமாக, 5 சதவீத பெருங்கடல்கள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக UNESCO ஆய்வு அறிக்கை கூறுகிறது. கூடுதலாக அமேசான் மழைக்காடு இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த வகையில், உத்தாரா கனடாவின் அன்கோலா என்ற இடத்தில் முந்திரிப்பழம் போன்ற வடிவம் கொண்ட பலாப்பழம் வளர்ந்திருப்பது அங்கு வசிப்போரை ஆச்சரியத்தில் அழுத்தியுள்ளது.
இந்த வித்தியாசமான முந்திரி பழம் போன்ற வடிவம் கொண்ட பலாப்பழம் மகாபலேஷ்வர் பண்டிகேட்டின் தோட்டத்தில் பயிரிடப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள பல சுற்றுலா பயணிகள் இந்த அதிசய பழத்தை கண்டு செல்கின்றனர். பொதுவாக பலாப்பழங்கள் சூடான மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளான தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா போன்ற கண்டங்களில் பயிரிடப்படுகிறது.
இது மல்பரி மற்றும் அத்திப்பழம் குடும்பத்தைச் சார்ந்தது. முக்கனிகளில் ஒன்றாக கருதப்படும் பலாப்பழம் வெளிப்புறமாக முட்களை கொண்டிருந்தாலும் உட்புறமாக மஞ்சள் நிற தேன் போன்ற சுவை கொண்ட பழங்களை கொண்டுள்ளது. பலா காய்கள் மற்றும் பலா பழங்கள் ஆகிய இரண்டுமே பலவிதமான உணவுகளை சமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் மகாபலேஷ்வரின் தோட்டத்தில் காணப்படும் இந்த பலாப்பழமானது மற்றவற்றை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது. இவரது தோட்டத்தில் காய்க்கும் பலாப்பழங்கள் அதன் அடிப்பகுதியில் ஒரு பழம் போன்ற வடிவம் கொண்ட ஒரு அமைப்பைக் கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு முந்திரி பழம் போன்ற போலவே காட்சியளிக்கிறது. சுருக்கமாக சொன்னால், இந்த விசித்திரமான பழமானது இயற்கை தந்த அதிசயம் என்று தான் கூற வேண்டும். உத்தாரா கனடாவில் கடந்த 70 ஆண்டுகளில் இது போன்ற அதிசயம் நிகழ்வது இதுவே முதல் முறை.
தற்போது இந்த பலாப்பழம் அந்த இடத்திற்கே ஹீரோவாகிவிட்டது. இப்போது வரை, அந்த பலாப்பழத்தின் சுவை எப்படி இருக்கும் என்பது குறித்த எந்த ஒரு விவரமும் தெரியவில்லை. மேலும் இந்த பழங்களை விற்பனை செய்யும் யோசனை உள்ளதா இல்லையா என்பது குறித்து மகாபலேஷ்வரும் எதுவும் கூறவில்லை. இதற்கு முன்பாக, கேரளாவில் உள்ள இடுக்கி காடுகளில் மூட்டி என்ற அரிய வகை பழங்களை பயிரிட்ட பேபி ஆப்ரஹாம் என்ற விவசாயி பிரலமாகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பழங்கள் சிவப்பு நிறத்தில் இருந்ததோடு, இனிப்பு கலந்த புளிப்பு சுவையைக் கொண்டிருந்தன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangalore, Cashew Nuts, Jack Fruit