மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. மாநிலத்தின் முதலமைச்சராக 2011இல் இருந்து மம்தா ஆட்சி நடத்தி வருகிறார். இவரது ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் நியமனத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் புகார் அளித்து வந்தன.
இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய குற்றவாளியாக அமலாக்கத்துறையில் அடையாளம் கூறப்படும் திரிணாமுல் எம்எல்ஏ மானிக் பட்டாசார்யா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னிலையில் வந்ததது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், 36,000 ஆசிரியர்கள் நியமனம் செல்லாது என தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார். காலியாக உள்ள பணியிடங்களை அடுத்த 3 மாதங்களுக்குள் நிரப்ப உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவின் மூலம் 2014ஆம் ஆண்டு ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதாகக் கூறி 2016இல் தொடக்கப் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்ட 36,000 ஆசிரியர்கள் தங்கள் வேலையை இழக்கிறார்கள்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் பாஜகவுக்கு பின்னடைவு... அமித்ஷா அவசர ஆலோசனை..!
இவர்கள் அனைவரும் 2016-17 கல்வியாண்டில் இருந்து வேலை செய்ய தொடங்கியவர்கள் ஆவர். இந்த தீர்ப்பை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று வரவேற்றுள்ள பாஜக, கல்வித்துறையில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மேற்கொண்ட ஊழலின் ஆழத்தை காட்டுவதாக தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வரவேற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: High court, Mamta banerjee, Scam, Teachers