முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகத் தேர்தலுடன் வயநாடு தொகுதிக்கும் இடைத்தேர்தல்? தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

கர்நாடகத் தேர்தலுடன் வயநாடு தொகுதிக்கும் இடைத்தேர்தல்? தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிக்கு அடுத்த வாரம் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Last Updated :
  • New Delhi, India

பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  இதனையடுத்து, எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையே மே மாதம் 24 ஆம் தேதியுடன் கர்நாடக சட்டமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய  உள்ள நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்த இறுதி அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தும் வகையில் தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க; ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு...!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இதனுடன் இணைத்து, ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள வயநாடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.  இதற்கான ஆலோசனைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

First published:

Tags: Byelection, Rahul Gandhi, Wayanad