நம் நாட்டு திருமணங்களில் சடங்குகள் பல விதமாக இருந்தாலும் மணமக்கள் உள்ளூர எதிர்பார்ப்பு ஆர்வம் கொண்டிருப்பது இருப்பது முதலிரவு சடங்குதான். இந்த முதலிரவு சடங்கை சாக்காக வைத்து ஒரு புதுமணப்பெண் நாடகமாடி மாப்பிள்ளை வீட்டாரை ஏமாற்றி கொள்ளை அடித்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு ஒரு குடும்பத்தார், திருமண ஏஜென்ட் மூலம் பெண் தேடி உள்ளனர். அவருக்கு பிடித்தார் போல ஒரு பெண்ணை ஏஜென்ட் காட்டியதைத் தொடர்ந்து வாலிபர் வீட்டார் திருமணத்திற்கு ஓகே சொல்லி தட புடலாக ஏற்பாடு செய்துள்ளனர்.
வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்ற நிலையில், மணமக்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மணப்பெண் தனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. எனவே 4 நாள்கள் முதலிரவு வேண்டாம் என்று கூறியுள்ளார். மணமகனுக்கு இது கவலையைத் தந்தாலும், சரி பொறுத்ததும் பொறுத்தோம் என எண்ணி காத்திருக்க முடிவு செய்தார். இதனால், மணப்பெண்ணிடம் மாப்பிள்ளை விலகி இருந்துள்ளார்.
இந்நிலையில், திருமணமான அந்த வாரமே மணப்பெண் திடீரென மாமியார் வீட்டில் இருந்து மாயமானார். அவருடன் சேர்த்து வீட்டில் இருந்த தங்க, வெள்ளி நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கமும் களவு போனது. இது மாப்பிள்ளை வீட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சந்தகமடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த ஏஜென்டின் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டிற்குள் புகுந்த பார்த்தபோது மாப்பிள்ளை வீட்டாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அந்த மணப்பெண் ஏஜென்ட்டுடன் அவரது வீட்டில் இருந்துள்ளார். அப்போது தான் இந்த திருமணமே கொள்ளை அடிப்பதற்காக போடப்பட்ட நாடகம் எனத் தெரியவந்தது. அந்த பெண் விரும்பி திருமணம் செய்துகொள்ளவில்லை; கொள்ளை அடிக்கத்தான் இதை செய்துள்ளார். இதற்காகத் தான் தனக்கு மாதவிடாய் எனக் கூறி முதலிரவை தள்ளி வைத்து, சரியான நேரம் பார்த்து நோட்டமிட்டு திருடி சென்றுள்ளார் என்ற உண்மை அம்பலமானது.
இதையும் படிங்க: பறக்கும் விமானத்தில் பார்ட்டி.. கலாட்டா செய்து பயணிகளுக்கு தொந்தரவு.. இருவர் கைது
தொடர்ந்து மணப்பெண் மற்றும் ஏஜெண்ட் ஆகிய இருவரையும் பிடித்த மணமகன் வீட்டார் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் ஏமாற்றப்பட்டாலும், உடனடியாக உஷாராகி மோசடி நபர்களை பிடித்ததால் மேலும் மற்றவர்கள் இவர்களிடம் ஏமாறுவதை தடுத்ததாக கூறி போலீசார் பாராட்டியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Couples, Crime News, Marriage