முகப்பு /செய்தி /இந்தியா / நாடாளுமன்ற இரு அவைகளும் ஐந்தாம் நாளாக முடங்கின - திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் ஐந்தாம் நாளாக முடங்கின - திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாஜகவினரும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் முழக்கங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாடாளுமன்ற இரு அவைகளும் ஐந்தாம் நாளாக முடங்கின. அத்துடன் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 13-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகளும், இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக் கோரி ஆளுங்கட்சியினரும் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 11 மணிக்கு மக்களவை தொடங்கியது முதல் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பாக ஆளுங்கட்சியினரும், அதானி, நீட் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சியினரும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் சபையில் ஆடியோ துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து, சபாநாயகரின் இருக்கை அருகே வந்து உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, அவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இதேபோல், மாநிலங்களவை கூடியது முதல் கூச்சல் குழப்பம் நீடித்தது. பாஜகவினரும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் முழக்கங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

First published:

Tags: Parliament