முகப்பு /செய்தி /இந்தியா / ராகுல்காந்தி, அதானி விவகாரம்: 7-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

ராகுல்காந்தி, அதானி விவகாரம்: 7-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகளும், இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக் கோரி ஆளுங்கட்சியினரும் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Last Updated :

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 13-ம் தேதி தொடங்கிய நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் 7 ஆவது நாளாக முடங்கியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியதில் இருந்தே, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் கடும் கூச்சல் குழப்பம் நிலவி வருகிறது. அதானி குழும பங்கு சந்தை முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினரும், மத்திய அரசு பற்றி லண்டனில் பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்களும் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற அவைகள் முடக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த இரு தரப்பும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வந்தன. இருப்பினும், காலை 11 மணிக்கு அவைகள் தொடங்கியதும் இரண்டு தரப்பினரும் அமளியில் ஈடுபட்டனர்.

top videos

    நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் கூச்சல் குழப்பத்தால், அவைகள் நண்பகல் 2 மணிவரை முதலில் ஒத்திவைக்கப்பட்டன. இதனை தொடர்ந்தும், உறுப்பினர்கள் ஒத்துழைக்காததால், நாள் முழுவதும் நாடாளுமன்றம் முடங்கியது. இதனை தொடர்ந்து வியாழக்கிழமை காலை அவைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் தொடர் அமளியால், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு ஒரு நாள் கூட நடைபெறாதது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Parliament, Union Budget 2023