முகப்பு /செய்தி /இந்தியா / பிரதமர் மோடி மீது வெறுப்பு... பொய் மூட்டைகளை 9 கேள்விகள் என்று சொல்லும் காங்கிரஸ் - பாஜக விளக்கம்

பிரதமர் மோடி மீது வெறுப்பு... பொய் மூட்டைகளை 9 கேள்விகள் என்று சொல்லும் காங்கிரஸ் - பாஜக விளக்கம்

ரவி சங்கர் பிரசாத்

ரவி சங்கர் பிரசாத்

பிரதமர் மோடி மீதான வெறுப்பின் காரணமாகவே பொய் மூட்டைகளை காங்கிரஸ் கேள்விகளாக எழுப்பியுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி, பிரதமர் நரேந்திர மோடி பிரதமாரானார். மோடி பிரதமராக பதவியேற்று நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்தது.

இந்தநிலையில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது ஆட்சியை விமர்சித்து காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை முன்வைத்துள்ளது. இதில் பல்வேறு விவகாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதற்கு பாஜக சார்பில் பதிலடியாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

9 கேள்விகளுக்கும் பதில் அளித்து பாஜக சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி மீதான வெறுப்பின் காரணமாகவே பொய் மூட்டைகளை காங்கிரஸ் கேள்விகளாக எழுப்பியுள்ளது.

கொரோனா தொற்றுநோய் மேலாண்மை குறித்து உலகம் முழுவதும் இந்தியாவை பாராட்டிய நிலையில், அதை கேள்வி எழுப்புவது காங்கிரஸ் கட்சியின் வெட்கமின்மையின் உச்சம் என்றார். இது கோவிட் காலத்தில் தங்கள் உயிரை தியாகம் செய்த லட்சக்கணக்கான ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆகியோருக்கு செய்யும் பெரிய அவமானம் என்று சாடினார்.

மேலும் அவர் கூறியதாவது, காங்கிரஸ் ஆட்சியில் இந்திய நிலங்களை சீனா பறித்தது. ஆனால், பாஜக ஆட்சியில் கிழக்கு லடாக் பகுதியில் சீனா அத்துமீறிய போது ராணுவம் தக்க பதிலடி தந்தது. எல்லைப் பகுதி உட்கட்டமைப்பை பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பலப்படுத்தியுள்ளது.

2014ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை விட்டு இறங்கிய போது உலகின் 5 பலவீனமான பொருளாதராமாக இந்தியா இருந்தது. ஆனால், பாஜக ஆட்சி அமைத்த 9 ஆண்டுகளில் உலகின் முன்னணி 5 பொருளாதார நாடு பட்டியலில் இந்தியா நுழைந்துள்ளது.

இதையும் படிங்க: இந்திய பாரம்பரியத்தை காங்கிரஸ் வெறுக்கிறது... செங்கோல் விவகாரத்தில் அமித் ஷா கண்டனம்

வேளாண் பொருள்களின் அடிப்படை ஆதரவு விலை குறிப்பிடும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி மீதான வெறுப்பில் இருந்து காங்கிரஸ் வெளியே வர வேண்டும். கடந்த 2 தேர்தலில் சந்தித்த அதை முடிவை தான் 2024 தேர்தலிலும் காங்கிரஸ் சந்திக்கப்போகிறது.

ஊழல் குறித்து காங்கிரஸ் பேசுவது அதிர்ச்சியாக உள்ளது. 2004-14 காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிலம், நீர், ஆகாயம் என அனைத்தில் ஊழல் ஆட்சியை காங்கிரஸ் நடத்தியது. காங்கிரஸ் கட்சியின் இரு முன்னாள் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் அவரது தாய் சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் ஜாமீனில் உள்ளார்கள் என்பதை காங்கிரஸ் உணர வேண்டும் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

First published:

Tags: BJP, Congress, PM Modi, Ravi Shankar Prasad