முகப்பு /செய்தி /இந்தியா / காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4.82 லட்சம் கோடி ஊழல் - பாஜக வீடியோ வெளியிட்டு குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4.82 லட்சம் கோடி ஊழல் - பாஜக வீடியோ வெளியிட்டு குற்றச்சாட்டு

மாதிரி படம்

மாதிரி படம்

Congress Video | நிலக்கரி,2ஜி,காமன்வெல்த் ஊழல் , பத்துலட்சம் கோடி ரூபாய் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு

  • Last Updated :
  • Tamil Nadu, India

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 4 லட்சத்து 82 ஆயிரத்து 69 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக பாஜக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதுடன் காங்கிரஸ் files என்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து 70 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பதாக பாரதீய ஜனதா கட்சி வீடியோ ஒன்றை அதன் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் என்றால் ஊழல் என்று அர்த்தம் என்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு ஊழல்களில் 4லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் சுரண்டியுள்ளதாக சாடியதோடு, காங்கிரஸ் அந்த தொகையை வைத்து பல்வேறு முன்னேற்ற திட்டங்களை வகுத்திருக்கலாம் என்று கூறியுள்ளது.

top videos

    குறிப்பாக 2004 முதல் 2014ம் ஆண்டுவரையிலான 10 ஆண்டுகள்தான் தொலைந்துவிட்ட தசாப்தம் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில்தான் நிலக்கரி,2ஜி,காமன்வெல்த் ஊழல் , பத்துலட்சம் கோடி ரூபாய் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊழல் உள்ளிட்டவை நடந்துள்ளதாக அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளது. இது வெறும் டிரெய்லர் மட்டுமே என்றும் பாஜக கூறி 3 நிமிட வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

    First published:

    Tags: BJP, Congress