காங்கிரஸ் என்னும் தேசவிரோத கருவியின் ஓர் அங்கமாக ராகுல் காந்தி மாறிவிட்டார் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் இல்லை எனவும், ஊடகங்கள், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.
இந்தியாவின் ஜனநாயகத்தை மீட்டெடுக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து, பெகாசஸ் விவகாரம் பற்றியும் பேசியுள்ளார். அவரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், வெளிநாட்டிற்குச் சென்று ராகுல் காந்தி இந்தியாவையும், நாடாளுமன்றத்தையும் அவமதித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய விவகாரத்தில் தலையிட ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் அழைத்ததற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு நடைபெற்று வரும் நிலையில், இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக உறுப்பினர்கள் ராகுல் காந்தியை மன்னிப்பு கோர வேண்டி வருகின்றனர். இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள் இடையே அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து 5 நாளாக நாடாளுமன்ற முடங்கி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: JP Nadda, Rahul Gandhi