முகப்பு /செய்தி /இந்தியா / அதானி விவகாரம் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானது: ரவிசங்கர் பிரசாத்

அதானி விவகாரம் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானது: ரவிசங்கர் பிரசாத்

ரவி சங்கர் பிரசாத்

ரவி சங்கர் பிரசாத்

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸார் ஏன் உயர்நீதிமன்றத்துக்கோ, உச்சநீதிமன்றத்துக்கோ செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்

  • Last Updated :
  • Delhi, India

அதானி விவகாரத்தில் அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி முன்வைத்து வருவதாக பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரவி சங்கர் பிரசாத், ‘என்ன பிரச்னையோ அதைப்பற்றி ராகுல் பேசவில்லை என்றார். ஏழு அவதூறு வழக்குகள் ராகுல்காந்தி மீது இருப்பதாக கூறிய அவர், ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸார் ஏன் உயர்நீதிமன்றத்துக்கோ, உச்சநீதிமன்றத்துக்கோ செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். மோடி சமூகத்தினரை ராகுல்காந்தி அவமதித்து விட்டதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

இதையும் வாசிக்க: எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் : 2024 தேர்தலில் களம் காண்பாரா ராகுல்?

top videos

    இதற்கிடையே, இந்திய ஜனநாயகத்திற்காகவே தாம் போராடி வருவதாகவும், இப்போராட்டங்கள் தொடரும் என்றும் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும் தமது பணிகள் தொடரும் என்றும், நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருந்தும் சேவையாற்ற முடியும் என்றும் கூறினார்.

    First published:

    Tags: Rahul Gandhi