முகப்பு /செய்தி /இந்தியா / "சீக்கியர்களின் ஆதரவு இந்தியாவுக்கே.." - வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர்!

"சீக்கியர்களின் ஆதரவு இந்தியாவுக்கே.." - வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர்!

இந்திய துணை தூதரகத்தில் தேசியக் கொடியுடன் சீக்கியர்கள்

இந்திய துணை தூதரகத்தில் தேசியக் கொடியுடன் சீக்கியர்கள்

பாஜகவைச் சேர்ந்த மஞ்சிந்தர் சிங் சிர்ஸா சீக்கியர்கள் தேசியக் கொடியுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்து, இந்திய துணை தூதரகத்தில் நடைபெறும் போராட்டத்தின் மூலம் இந்தியாவின் சீக்கியர்கள் தெளிவான சத்தமான செய்தியை உலகுக்கு சொல்லியிருக்கிறார்கள்

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவராக அமிரித் பால் சிங் பதவியேற்றதிலிருந்து பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கைகள் தலைதூக்கின. கடந்த மாதம் அவரது ஆதரவாளர் அமிர்தசரஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது கத்தி, துப்பாக்கி ஏந்தி தனது ஆதரவாளர்களுடன் காவல்நிலையத்தை அம்ரித்பால் சிங் முற்றுகையிட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயது.

இதனையடுத்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பஞ்சாப் மாநிலத்துக்கு புகுந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனைக் கண்டித்து லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய துணை தூதரகத்தில் நுழைந்து இந்திய தேசியக் கொடியை அகற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

பாஜக பிரமுகர் மஞ்சிந்தர் சிங் சிர்சா சீக்கியர்கள் தேசியக் கொடியுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்து, இந்திய துணை தூதரகத்தில் நடைபெறும் போராட்டத்தின் மூலம் இந்தியாவின் சீக்கியர்கள் தெளிவான சத்தமான செய்தியை உலகுக்கு சொல்லியிருக்கிறார்கள். இந்தியா எங்கள் தாய் நாடு, சீக்கியர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: BJP, Punjab