முகப்பு /செய்தி /இந்தியா / 2024 தேர்தலில் தமிழகத்தில் பாஜக சரித்திரம் படைக்கும்... அண்ணாமலை பேட்டி..

2024 தேர்தலில் தமிழகத்தில் பாஜக சரித்திரம் படைக்கும்... அண்ணாமலை பேட்டி..

அண்ணாமலை

அண்ணாமலை

Annamalai pressmeet | ஜூலை 2வது வாரம் என்னுடைய தலைமையில் பாஜக பாதயாத்திரை தமிழ்நாட்டில் நடைபெறும் - அண்ணாமலை பேட்டி

  • Last Updated :
  • Tirupati, India

2024 பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இன்று விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை, நாட்டு மக்கள் வளமுடனும், நலமுடனும் வாழ அருள் புரிய வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன்.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பொறுத்த வரை கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எந்த கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வந்த சரித்திரம் கிடையாது. நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.

ஆனால் மக்கள் தீர்ப்பு வேறு விதமாக அமைந்துவிட்டது. இருந்தாலும் 2024 பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றும். மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்ததால் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிங்க; முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்... எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

ஆனால் ராகுல் காந்தி காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்ற முதுமொழிபோல் பேசி வருகிறார். மக்கள் மாற்றத்தை விரும்பி காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர். ராகுல் காந்தி தானும் தன்னுடைய சகோதரியும் பிரச்சாரம் செய்ததால் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்று கருதுகிறார்.

ஆனால் அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், சட்டிஸ்கர் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளன. அந்த மாநில தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும். கர்நாடகாவில் உள்ள மொத்த எம்பிக்கள் எண்ணிக்கை 28. அவற்றில் 25 எம்.பிக்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தை பொறுத்த வரை 28 பாராளுமன்ற தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம்.

2024 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் சரித்திரம் படைக்கும். பாதயாத்திரையில் கலந்து கொள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின் ஜூலை இரண்டாவது வாரம் குறிப்பிட்டபடி என்னுடைய தலைமையில் பாஜக பாதயாத்திரை தமிழ்நாட்டில் நடைபெறும் என்று கூறினார்.

top videos

    செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி.

    First published:

    Tags: Annamalai, BJP, Karnataka Election 2023, Tirumala Tirupati, Tirupati