பாஜகவில் 4 மாநில தலைவர்களை மாற்றம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அறிவித்துள்ளார். அதன்படி, டெல்லி, பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தானிற்கு புதிதாக மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் டெல்லி செயல் தலைவராக இருந்த வீரேந்திர சச்தேவாவை மாநில தலைவராக ஜெ.பி.நட்டா நியமித்துள்ளார்.
பீகார் மாநில பாஜக தலைவராக இருந்த சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக, சாம்ராட் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று ராஜஸ்தானில் மாநில தலைவராக இருந்த சதீஸ் பூனியாவுக்கு பதிலாக சிபி ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநில தலைவராக இருந்த சமீர் மொஹந்திக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர் மன்மோகன் சமலை புதிய தலைவராக நியமித்து கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இந்த 4 மாநிலங்களும் பாஜக ஆட்சியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி நடைபெறுகிறது. பீகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு மெகா கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: "370 சட்டம் மீண்டும் வரும்வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பீஜு பட்நாயக் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2024 மக்களவை தேர்தலுடன் சேர்ந்து ஒடிசாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.