முகப்பு /செய்தி /இந்தியா / சாக்கடைக்குள் கட்டுக்கட்டாக கிடந்த ரூபாய் நோட்டுகள்.. துள்ளி குதித்து அள்ளி செல்லும் மக்கள்! - வைரல் வீடியோ

சாக்கடைக்குள் கட்டுக்கட்டாக கிடந்த ரூபாய் நோட்டுகள்.. துள்ளி குதித்து அள்ளி செல்லும் மக்கள்! - வைரல் வீடியோ

பணக்கட்டுகளை அள்ளும் மக்கள்

பணக்கட்டுகளை அள்ளும் மக்கள்

Bihar sewage cash | பிகாரில் சாக்கடைக்குள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கண்ட மக்கள் துர்நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் உள்ளே குதித்தனர்.

  • Last Updated :
  • Bihar Sharif, India

பீகாரில் கழிவுநீரில் கட்டுக்கட்டாக சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை, பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.

பாட்னா அருகே உள்ள சசாராம் பகுதியில் பாலத்திற்கு அடியில் ஓடிய கழிவுநீரில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பாலத்தில் கூடினர். கழிவுநீரில் ரூபாய் நோட்டுகள் மிதப்பதை உறுதி செய்த அப்பகுதி மக்கள், சாக்கடைக்குள் இறங்கினர்.

சாக்கடைக்குள் இறங்கியவர்கள் இரண்டாயிரம், 500, 100 ரூபாய் நோட்டுகளை அள்ளிச்சென்றனர். தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர், பொதுமக்களை அப்புறப்படுத்தினர். பணத்தை கொண்டு சென்ற சிலர் அவை உண்மையான நோட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதே சமயம் அவை போலியான தாள்கள் என்று ஒரு சிலர் கூறினர். கழிவுநீரில் ரூபாய் நோட்டுகளை வீசியவர்கள் யார் என்றும், அதன் உண்மைத்தன்மை குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

top videos
    First published:

    Tags: Bihar, Money