முகப்பு /செய்தி /இந்தியா / மணமேடையில் இப்படி ஒரு ட்விஸ்டா? மணப்பெண்ணின் தங்கையை கரம்பிடித்த மாப்பிள்ளை.. வெளிச்சத்துக்கு வந்த காதல் கதை!

மணமேடையில் இப்படி ஒரு ட்விஸ்டா? மணப்பெண்ணின் தங்கையை கரம்பிடித்த மாப்பிள்ளை.. வெளிச்சத்துக்கு வந்த காதல் கதை!

புதுல் குமாரி - ராஜேஷ்

புதுல் குமாரி - ராஜேஷ்

பீகாரில் மணமேடையில் பரபர ட்விஸ்டுடன் ஒரு காதல் கதை கல்யாணத்தில் முடிந்துள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

பீகாரின் சரண் மாவட்டத்தில் ஒரு வித்தியாசமான திருமண வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாப்பிள்ளை ராஜேஷ், அக்காவை திருமணம் செய்துக் கொள்ள வந்திருந்தார். திருமண ஊர்வலத்துடன் வந்த மணமகன் தனது வருங்கால மைத்துனியை மணந்தார். இந்த திருமணம் சரண் மாவட்டத்தின் மஞ்சியில் உள்ள பபௌலி கிராமத்தில் நடைபெற்றது. அங்கு மணமகன் மற்றும் மணமகள் தரப்புக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டது. பின்னர், திரளாக வந்த போலீஸார், மணப்பெண்ணின் தங்கையுடன் மணமகன் ராஜேஷை சேர்த்து வைத்து மணமக்கள் ஊர்வலத்தை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

சாப்ரா நகரின் பின்டோலியில் வசிக்கும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமாரின் திருமண ஊர்வலம் பபௌலி கிராமத்தை அடைந்தது. பின் மணமகள் ரிங்கு குமாரியின் தந்தை ராமு அவரது வீட்டு வாசலில் ஊர்வலத்தை நடத்தினார். பேண்ட் வாத்தியத்துடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் இறை வழிபாடு நிறைவு பெற்றது. சுமார் 11 மணியளவில் மணப்பெண்ணின் தங்கை புதுல் குமாரி, ரகசியமாக கூரையின் மீது ஏறி மாப்பிள்ளை ராஜேஷை அழைத்து, நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

மறுபுறம், மணமகன் ராஜேஷ் அவசரமாக தனது குடும்பத்தினரையும் உறவினர்களையும் அழைத்து பேசியுள்ளார். பின்னர் இந்த விவகாரம் கைகலப்பாக மாறியது, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து இச்சம்பவம் மாஞ்சி காவல் நிலைய போலீஸாருக்கு தெரிய வந்தது.

நிலைமை குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் உள்ளூர் தலைவர் மற்றும் மணமகன் ராஜேஷிடம் பேசினர். ரிங்குவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன்பே தனக்கு புதுல் நெருக்கம் என இரு குடும்பத்தாரிடம் கூறினார் ராஜேஷ். சாப்ராவில் உள்ள கல்லூரியில் இடைநிலைத் தேர்வை முடித்த புதுல், அடிக்கடி ஊருக்குச் சென்று அங்கு ராஜேஷை சந்தித்து வந்திருக்கிறார். அந்த சந்திப்புகளின் போது இருவரும் ஒருவரையொருவர் காதலித்திருக்கின்றனர். காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு ரிங்குவுடன் ராஜேஷுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் விரக்தியடைந்த புதுல், திருமணத்தை நிறுத்துவது அல்லது தற்கொலை செய்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

பின்னர், மணமகளும் தனது தங்கை புதுல் குமாரியுடன் மணமகன் ராஜேஷ்குமார் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். ஒருவழியாக பஞ்சாயத்து முடிந்து மணப்பெண்ணின் தங்கையை மணமுடித்து ஊர் திரும்பினார் மணமகன் ராஜேஷ்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Bihar