முகப்பு /செய்தி /இந்தியா / கணவரைத் தேடி வந்த பெண்ணை வன்கொடுமை செய்த காவல் அதிகாரி- போலீஸ் தேடும் நிலையில் தலைமறைவு

கணவரைத் தேடி வந்த பெண்ணை வன்கொடுமை செய்த காவல் அதிகாரி- போலீஸ் தேடும் நிலையில் தலைமறைவு

கிரைம் நியூஸ்

கிரைம் நியூஸ்

புகார் அளிக்க வந்த தன்னை காவல்துறை அதிகாரி மற்றும் கிராம தலைவர் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Bihar, India

பீகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரி மற்றும் கிராமத் தலைவர் மீது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் தெதாகஞ்ச் காவல் நிலையத்தின் நிரஜ் குமார் நிராலா என்ற காவலர் பணியாற்றி வருகிறார். இதே ஊரை சேர்ந்த ஒருவரை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் மணந்துள்ளார். இந்த இந்நிலையில், அந்த பெண்ணின் கணவரை சில தினங்களாக காணவில்லை. எனவே அவரின் ஊரான தெதாகஞ்ச் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க அந்தப் பெண் வந்துள்ளார்.

இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி நிரஜ் குமார் நிராலா அந்தக் கிராமத்து தலைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அவரும் காவல் நிலையத்திற்கு வந்து பெண்ணின் கணவரை கண்டுபிடிக்க உதவி செய்வதாக உறுதியளித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணை காவல் நிலையத்திலேயே தங்க வைத்துள்ளார் நீரஜ்குமார்.

அப்போது காவல் நிலையத்தில் சின்ன வேலைகளை செய்யுமாறு கூறியுள்ளார் நீரஜ்குமார். அந்த வேலைகளை அந்தப் பெண்ணும் செய்து வந்துள்ளார். இப்படியாக எட்டு நாட்கள் கடந்துள்ளன. இறுதியில் காவல் நிலைய அதிகாரி நீரஜ்குமார் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு அந்தக் கிராமத்தலைவரும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவரை கண்டுபிடித்த நீரஜ்குமார் கணவரிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு அந்தப் பெண்ணை விடுவித்ததாகவும் கூறப்படுகிறது. இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் எனறும் நீரஜ்குமார் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் மாவட்ட காவல்துறை அலுவலகம் சென்று காவல் கண்காணிப்பாளர் எனமுல் ஹக் மெக்னுவிம் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை விசாரிக்க டிஎஸ்பி அந்தஸ்துள்ள அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணை ஒரு வாரமாக சிறைபிடித்து வைத்திருப்பது உறுதியானதால், இந்திய தண்டனைச் சட்டம் 343, 376D, 384, 385, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் நிரஜ் குமார் நிராலா மற்றும் முகியா ஆகியோர் மீது தெதாகஞ்ச் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் (வழக்கு எண் 39/2023) பதிவு செய்துள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மெக்னு கூறியுள்ளார்.

Also Read : அமைச்சரின் வீட்டிக்கு தீ வைப்பு... கலவரத்தால் மணிப்பூர் மக்கள் மீண்டும் அவதி..!

top videos

    இந்த நிலையில், தகவல் அறிந்து குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தப்பியோடிவிட்டனர். அவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மீது இரண்டு வாரங்களுக்குள்  நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பதையும் காவல் கண்காணிப்பாளர் மெக்னு கூறியுள்ளார்.

    First published:

    Tags: Bihar, Crime News