முகப்பு /செய்தி /இந்தியா / பெண் அதிகாரியை தரதரவென இழுத்து தாக்கிய மணல் மாஃபியா கும்பல்.. அதிர்ச்சி வீடியோ

பெண் அதிகாரியை தரதரவென இழுத்து தாக்கிய மணல் மாஃபியா கும்பல்.. அதிர்ச்சி வீடியோ

பீகார் பெண் அதிகாரி மீது தாக்குதல்

பீகார் பெண் அதிகாரி மீது தாக்குதல்

ஆய்வுக்கு சென்ற பெண் அதிகாரியை மணல் மாபியா கும்பல் கொடூரமாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் பீகார் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

  • Last Updated :
  • Bihar, India

பீகார் மாநிலத்தில் சட்டவிரோத செயல்களில் மாபியா கும்பல்கள் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதன்படி, அம்மாநில தலைநகர் பாட்னாவை ஒட்டியுள்ள பகுதிகளில் பல மாபியா கும்பல்கள் தீவிர மணல் கடத்தலில் ஈடுபடுகின்றன.

இந்த புகார்கள் தொடர்பாக ஆய்வு செய்ய பாட்னா அருகே உள்ள பிஹ்தா பகுதியில் சுரங்கத்துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர்  ஆய்வுக்காக சென்றார். அவருடன் இரு ஆய்வாளர்களும் உடன் சென்றுள்ளனர். அப்போது, அங்கு லாரி லாரியாக கும்பல் மணலை கடத்தி சென்று கொண்டிருந்தன. அதிகாரி வந்ததை பார்த்த அந்த மாபியா கும்பல், சற்றும் அஞ்சாமல் தாக்கத் தொடங்கியுள்ளனர். பெண் அதிகாரியை தரதரவென இழுத்து சென்று கற்களை வீசி அடித்து தாக்கினர்.

இந்த கோர தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்த நபர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இணையத்தில் பரவிய இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து சம்பவம் காவல்துறை கவனத்திற்கு சென்று இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மணல் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையிலும் காவல்துறை தீவிரம் காட்டி வருவதாக பாட்னா காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். வீடியோ ஆதரங்களின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் நிச்சயம் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. தாக்குதலில் பெண் அதிகாரி உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதலமைச்சர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வாட்ஸ் ஆப் மெசேஜை காட்ட மறுத்த காதலி கழுத்தறுத்து கொலை... பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பகீர் சம்பவம்..!

top videos

    ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் பீகாரின் சோன்பூர் என்ற பகுதியில் இதோபோல் ஆய்வுக்கு சென்ற அதிகாரியை பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவோம் என மாபியா கும்பல் மிரட்டிய அச்சுறுத்தினர். இதுபோன்ற அச்சுறுதல் தரும் மாபியா கும்பல் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியான பாஜக பீகார் அரசிடம் வலியுறுத்தி வருகிறது.

    First published:

    Tags: Bihar, Crime News, Sand mafia, Viral Video