முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவில் முதலீடு செய்ய உலகின் பெரிய நிறுவனங்கள் ஆர்வம் : பிரதமர் மோடி

இந்தியாவில் முதலீடு செய்ய உலகின் பெரிய நிறுவனங்கள் ஆர்வம் : பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

PM Modi Speech | இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்க ஆன்லைன் நிறுவனங்கள் முன்வந்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் முதலீடு செய்ய உலகின் பெரிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

71 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்கும் ரோஜ்கர் மேளா என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலியில் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் மூலதனத்துக்காக 34 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றார். அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஒரு காலத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்ததாகவும், தற்போது அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது ஆன்லைனில் முறையில் எளிதாக்கப்பட்டு இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் சாலை போக்குவரத்து வசதி 4 லட்சம் கிலோ மீட்டராக இருந்ததாகவும், தற்போது இது ஏழரை லட்சம் கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

மேலும் படிக்க... வெயில் தாக்கத்துக்கு நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு... 7 கி.மீ நடந்தே சென்றதால் விபரீதம்..!

top videos

    இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்க ஆன்லைன் நிறுவனங்கள் முன்வந்து உள்ளதாகவும், உலகளவில் பெரிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்ய வரும்படி அடுத்த வாரம் அழைக்க இருப்பதாகவும் மோடி கூறினார்.

    First published:

    Tags: Modi, Pm