முகப்பு /செய்தி /இந்தியா / பிரபல நடிகை மரண வழக்கில் வெளியான பரபரப்பு வீடியோ.. அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகை மரண வழக்கில் வெளியான பரபரப்பு வீடியோ.. அதிர்ச்சி தகவல்

நடிகை அகன்ஷா துபே

நடிகை அகன்ஷா துபே

நடிகையின் காதலன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ வலுவான ஆதாரமாக இருப்பதாக காவல்துறை தகவல்

  • Last Updated :
  • Varanasi, India

நடிகை அகன்ஷா துபே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, கண்ணீர் மல்க பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே, கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது தாய் அளித்த புகாரின் பேரில், அகன்ஷா துபேயின் முன்னாள் காதலர் அமர்சிங் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அகன்ஷா துபே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மக்களுடன் தான் பேசப்போவது இதுதான் கடைசி என்றும், தனது மரணத்திற்கு முன்னாள் காதலர் சமர்சிங் தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமர் சிங் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ அவருக்கு எதிரான வலுவான ஆதாரமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இந்த வீடியோ உண்மையில் மரணத்திற்கு முன்பு எடுக்கப்பட்டதா? அல்லது உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டதா என்பதை அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், சமர் சிங் உடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

First published:

Tags: Actress, Cinema, Tamil News