இந்தியாவில் காணப்படும் பல மரங்களில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இவற்றிலிருந்து விளையும் பழங்கள், காய்கறிகளை நாம் உபயோகிக்கும்போது நம்முடைய உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். நேரடியாக நாம் அம்மரத்தின் பலன்களை பெறும்போது அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்திருப்பதாக கூறுகின்றனர் இயற்கை விஞ்ஞானிகள்.
அந்த வகையில், கடுக்காய் (Terminalia chebula) மரங்களிலும் பல்வேறு விதமான மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. மேலும் இம்மரத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கள் அனைத்து வகையான நோய்களிலிருந்தும் நம்மை காப்பதாக மக்கள் நம்புகின்றனர். இதனால்தான் ஆயுர்வேதத்தில் அம்மா என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது கடுக்காய் மரங்கள். இத்தகைய மரங்களில் விளையும் பழங்களை தலைமுறை தலைமுறையாக ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர் பாரத்பூரைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணா..
Read More : ருசியான நோன்பு கஞ்சி தயார் செய்முறை... இதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
இதுகுறித்து விவசாயி கிருஷ்ணா கூறுகையில், எங்களுடைய பண்ணையில் சுமார் 300 ஆண்டுகளான பழமையான கடுக்காய் (டெர்மினாலியா செபுலா) மரம் உள்ளது. இந்த மரத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 400 கிலோ வரை பழங்கள் கிடைக்கிறது. இவற்றில் பல்வேறு வகையான மருத்துவக் குணங்கள் உள்ளதால், சந்தையில் இந்த பழம் ரூ. 2.5 லட்சத்திற்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கிறார்.
இருப்பினும் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவக் குணம் கொண்ட பழங்களை வழங்குவதாகவும் கூறுகிறார் விவசாயி கிருஷ்ணா.
மருத்துவ மதிப்புகள் நிறைந்த இம்மரத்தின் பழங்கள் பல நோய்களுக்குத் தீர்வாக அமைகிறது. குறிப்பாக இருமல், சர்க்கரை நோய், தொழுநோய், வீக்கம், வயிற்றுப் பிரச்சனைகள், ஒட்டுண்ணிப் புழுக்களால் உருவாகும் நோய், ஸ்வர்பங், கிரஹானி, மலச்சிக்கல், அல்சர், சோர்வு, விக்கல், தொண்டை, இதயத் தொற்று, மஞ்சள் காமாலை, வலி, கல்லீரல் நோய் போன்ற நோய்களுக்கு இந்தச் செடி உதவுகிறது. பொதுவாக இந்த மரம் மாமரத்தைப் போல் பெரியது. இந்த மரம் பொதுவாக கீழ் இமயமலைப் பகுதியில் ராவி நதிக்கரையில் கிழக்கு வங்காளம்-அஸ்ஸாம் வரை 50,00 அடி உயரத்தில் காணப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.