கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த மார்ச் 25ஆம் தேதி அன்று இரவு 9 மணி அளவில் அங்கு வசிக்கும் 19 வயது பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் அருகே உள்ள பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பூங்காவில் இருந்த வாலிபர் ஒருவருக்கும் பெண்ணுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தினால் கோபமடைந்த அந்த வாலிபர் தனது மூன்று நணபர்களை பூங்காவிற்கு அழைந்து வந்துள்ளார். அந்த நான்கு வாலிபர்களும் ஆண் நண்பரை மிரட்டி துரத்திவிட்டுவிட்டு இளம்பெண்ணை கார் ஒன்றில் வலுக்கட்டாயமாக தூக்கி கடத்தி சென்றுள்ளனர். பின்னர், இரவு முழுவதும் ஓடும் காரில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைபடுத்தியுள்ளனர்.
அதிகாலை 4 மணி அளவில் பெண்ணின் வீட்டருகே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதை வெளியே கூறினால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்தினரிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை கூறிய நிலையில், அவர் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.
இதையும் படிங்க: கொசுவர்த்தி புகையால் நேர்ந்த விபரீதம்... தூக்கத்திலேயே பிரிந்த 6 உயிர்கள்... டெல்லியில் சோகம்..!
தொடர்ந்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் குற்றச்செயலில் ஈடுபட்ட சதீஷ், விஜய், ஸ்ரீதர் மற்றும் கிரண் என்ற 4 வாலிபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் 22இல் 26 வயதை சேர்ந்தவர்கள். கைது செய்தவர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bengaluru, Crime News, Gang rape