சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் பெருநகரங்களில் ஆட்டோ, கார் போலவே இரு சக்கர வாகனங்களான பைக்குகளின் டாக்சி சேவையும் வழங்கப்படுகிறது. செல்போன் செயலி மூலம் இந்த சேவைகளை தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன. இது போன்ற பைக் டாக்சி சேவைக்கு பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்த பைக் டாக்சி சேவைகளால் தங்கள் வருவாய் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதாக அவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பைக் டாக்சி சேவைகளுக்கு எதிர்ப்பு பெங்களூருவில் உள்ள ஆட்டோ சங்கத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதற்கு சுமார் 21 ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி இன்று நடைபெறும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 2 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு நகர ரயில் நிலையத்தில் இருந்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வீடு வரை ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்ட பேரணி நடத்துகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்னர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ரேப்பிடோ ஓட்டும் இளைஞரை பிடித்து வைத்து அடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 16 வயது கர்ப்பிணி சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலன்.. பெற்றோரை சிறைபிடித்து அடித்த பகீர் சம்பவம்
அந்த இளைஞர் வெள்ளை நம்பர் பிளேட் வைத்துக்கொண்டு டாக்சி சேவை தருகிறார் என கூறி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அரங்கேறிய சில நாள்களிலேயே பெங்களூரு முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Auto Driver, Karnataka, Strike