முகப்பு /செய்தி /இந்தியா / வாட்ஸ் ஆப் மெசேஜை காட்ட மறுத்த காதலி கழுத்தறுத்து கொலை... பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பகீர் சம்பவம்..!

வாட்ஸ் ஆப் மெசேஜை காட்ட மறுத்த காதலி கழுத்தறுத்து கொலை... பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பகீர் சம்பவம்..!

கொலை செய்யப்பட்ட பெண் நவ்யா

கொலை செய்யப்பட்ட பெண் நவ்யா

வாட்ஸ்ஆப் சேட்டை காட்ட மறுத்த ஆத்திரத்தில் காதலியை கழுத்து அறுத்துக்கொன்ற காதலனை போலீஸார் கைது செய்தனர்.

  • Last Updated :
  • Karnataka, India

காதலியின் பிறந்தநாள் பார்டியை கொண்டாடிய சில மணிநேரத்திலேயே அவரை காதலன் கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள லக்கெரே பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் நவ்யா. இந்த பெண் போலீஸ் துறையில் கிளர்க்காக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது தூரத்து உறவினரான பிரசாந்த் என்ற 28 வயது வாலிபரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி அன்று நவ்யாவுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அன்றைய தினத்தில் கொண்டாட முடியாததால் அடுத்த சில நாள் கழித்து கேக் வெட்டி இருவரும் கொண்டாட முடிவு செய்துள்ளனர். எனவே, சம்பவ தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று நவ்யா காதலன் பிரசாந்த் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினர்.

தொடர்ந்து சில மணி நேரத்தில் நவ்யாவுக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து நவ்யா வேறு ஒரு நபருடன் வாட்ஸ்ஆப்பில் சேட் செய்யத் தொடங்கியுள்ளார். யாரிடம் சாட் செய்கிறார் என கேட்க அதை நவ்யா காட்ட மறுத்துள்ளார். ஒருகட்டத்தில் தொடர்ச்சியாக கேட்டும் காதலி மறுக்கவே, ஆத்திரமடைந்த பிரசாந்த் நவ்யாவை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க: நாள்தோறும் மாந்திரீக பூஜை.. தலையை துண்டித்து நரபலி கொடுத்த தம்பதி

கொலை செய்துவிட்டு சுமார் 5, 6 மணிநேரம் காதலியின் உடல் அருகே அமர்ந்திருந்துள்ளார். மறுநாள் காலை அண்டை வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு கதவை தட்டி பார்த்தனர். கதவு திறக்கபடாத நிலையில், போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.

top videos

    உடனடியாக விரைந்த போலீசார் கதவை திறந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த நவ்யாவின் உடலை மீட்டு, கொலையாளி பிரசாந்தை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பிரசாந்தை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Crime News, Lovers, WhatsApp