முகப்பு /செய்தி /இந்தியா / சவாரி செல்வதில் தகராறு.. ஐடி ஊழியர் மீது ஆட்டோவை ஏற்றிய டிரைவர்.. பகீர் காட்சிகள்

சவாரி செல்வதில் தகராறு.. ஐடி ஊழியர் மீது ஆட்டோவை ஏற்றிய டிரைவர்.. பகீர் காட்சிகள்

சிசிடிவி பதிவு

சிசிடிவி பதிவு

ஆட்டோ ஓட்டுநர் அதிக கட்டணத்தை கேட்டதால் சவாரி வேண்டாம் என்ற கூறிய பயணி மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல் நடத்திய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பைக் டாக்ஸி சேவைகளுக்கும் இடையே கடும் பூசல் நிலவி வருகிறது. ஆட்டோவை விட குறைந்த கட்டணத்தில் பைக் டாக்ஸி சேவைகள் கிடைப்பதால் பயணிகள் பைக் டாக்ஸியை அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில், இது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என சில மாதங்களாக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

சில இடங்களில் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்தும் அசாம்பாவிதங்களும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் அதிக கட்டணத்தை கேட்டதால் சவாரி வேண்டாம் என்ற கூறிய பயணி மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல் நடத்திய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் அசார் கான் தனக்கு நேர்ந்த இந்த பாதிப்பை ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் மே 24ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. இவர் பெங்களூரு எச்.எஸ்.ஆர் லே அவுட் பகுதியில் அதிகாலை நேரத்தில் காத்திருக்கும் போது ஆட்டோ வந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநரிடம் இவர் பேரம் பேசிய நிலையில், அதற்கு ஆட்டோ ஓட்டுநர் பயணி சொன்ன கட்டணத்தை விட கூடுதல் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால், தனக்கு ஆட்டோ வேண்டாம், வேறு பைக் டாக்ஸி பிடித்து செல்கிறேன் என அசார் கூறியதாக தெரிகிறது. இது ஆட்டோ ஓட்டுநரை ஆத்திரப்படுத்தியுள்ளது. ஐடி ஊழியர் ஆட்டோ நின்ற இடத்தில் விலகி நடைபாதையில் நடந்து போன நிலையில், அந்த ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து வேகமாக வந்து அந்த ஊழியர் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது.

top videos

    ட்விட்டரில் அசார் கான் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த நிலையில், பெங்களூரு காவல்துறை அவரை தொடர்பு கொள்ள முயற்சி நடத்தி வருகிறது. அவர் ஆட்டோ ஓட்டுநர் மீது முறைப்படி புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறை தரப்பு கூறியுள்ளது.

    First published:

    Tags: Auto Driver, Bengaluru, CCTV Footage, Crime News