முகப்பு /செய்தி /இந்தியா / பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழக ராணுவ வீரர்கள்... சக வீரரே கொன்றது அம்பலம்... அதிர்ச்சித் தகவல்..!

பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழக ராணுவ வீரர்கள்... சக வீரரே கொன்றது அம்பலம்... அதிர்ச்சித் தகவல்..!

பதிண்டா ராணுவ முகாம்

பதிண்டா ராணுவ முகாம்

Bathinda military station attack | துப்பாக்கிச் சூடு தொடர்பாக அடையாளம் தெரியாத இருவர் மீது பஞ்சாப் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

  • Last Updated :
  • Punjab, India

பதிண்டா ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர் ஒருவரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 12ஆம் தேதி பஞ்சாபில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் அதிகாலை நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உட்பட பீரங்கி படையைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது பயங்கரவாதத் தாக்குதல் கிடையாது என்றும், ராணுவ வீரர் ஒருவருக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பு இருப்பதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வெப்பக்காற்று வீசும்.. வெளியில் வருவதை தவிருங்கள் - வானிலை மையம் எச்சரிக்கை

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக அடையாளம் தெரியாத இருவர் மீது பஞ்சாப் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக ஜவான் ஒருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Indian army, Punjab