முகப்பு /செய்தி /இந்தியா / முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பசவராஜ் பொம்மை...

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பசவராஜ் பொம்மை...

பசவராஜ் பொம்மை

பசவராஜ் பொம்மை

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார்.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே அதிக தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில்

மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் 136 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 65 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்துவருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்துவருகிறது. அதன்மூலம் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

அதனையடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பாஜக கட்சி அலுவலகங்களில் தொண்டர்கள் சோகத்துடன் அமர்ந்திருந்தனர். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் முதல்வரைத் தேர்வு செய்யும் பணிக்கு தீவிர ஆலோனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தநிலையில், தற்போதைய கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜ்பவன் அலுவலகத்துக்குச் சென்ற அவர், கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெல்லாட்டிடம் ராஜினாமா கடித்ததை அளித்தார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளேன். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: Karnataka Election 2023