முகப்பு /செய்தி /இந்தியா / ஷீரடி சாய்பாபா கோவிலில் குவியும் நாணயங்கள்...வாங்க மறுக்கும் வங்கிகள்...என்னதான் பிரச்னை?

ஷீரடி சாய்பாபா கோவிலில் குவியும் நாணயங்கள்...வாங்க மறுக்கும் வங்கிகள்...என்னதான் பிரச்னை?

ஷீரடி சாய்பாபா கோவில் நாணயங்கள்

ஷீரடி சாய்பாபா கோவில் நாணயங்கள்

போதிய இட வசதி இல்லாததால் ஷீரடி சாய்பாபா கோவிலில் இருந்து நாணயங்களை வாங்க வங்கிகள் மறுத்துவிட்டன.

  • Last Updated :
  • Maharashtra, India

மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூர் அருகே ஷீரடியில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்தக் கோவிலுக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம், நகை போன்றவற்றைக் காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம்.

கோவிலில் காணிக்கையாகப் பெறப்படும் பணம் இந்த ட்ரஸ்ட்-ன் பெயரில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும். இதற்காக ட்ரஸ்ட் பெயரில் 13 வங்கி கணக்குகள் உள்ளன. இவற்றில் 12 வங்கிகள் ஷீரடியிலேயே இருக்கின்றன. ஒரு வங்கி நாசிக்கில் இருக்கிறது. இந்த வங்கிகளில் டிரஸ்ட் பெயரில் சுமார் 11 கோடி ரூபாய் உள்ளது. இந்நிலையில் ஷீரடியில் இருக்கும் நான்கு வங்கிகள் சாய்பாபா கோவிலில் இருந்து நாணயங்களைப் பெற்ற கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளன.

வங்கிகளில் போதிய இடம் இல்லாததாலேயே நாணயங்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என வங்கிகள் விளக்கம் அளித்துள்ளன. வங்கிகள் நாணயங்களைப் பெற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளதால் தங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக டிரஸ்ட் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜாதவ் கூறுகிறார். எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என டிரஸ்ட் சார்பில் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read : ட்ரோன்களின் உதவியுடன் மருந்து டெலிவரி.. போக்குவரத்து நெருக்கடி சவாலை சமாளிக்க புதிய முயற்சி...!

அகமது நகரில் இருக்கும் மற்ற வங்கிகளின் கிளையை நாடவும் டிரஸ்ட் சார்பில் முடிவு செய்துள்ளது. மற்ற வங்கிகள் ஒப்புக் கொண்டால் அந்த வங்கிகளில் புதிதாக டிரஸ்ட் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கவும் டிரஸ்ட் தயாராக உள்ளது. ஒவ்வொரு மாதமும் 1 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலான நாணங்கள் சுமார் 28 லட்சம் அளவிற்கு காணிக்கையாக வசூல் ஆவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இப்போது நாணயங்களைப் பெற்றுக் கொள்ள முடியாது என நான்கு வங்கிகள் உறுதியாக மறுப்புத் தெரிவித்துள்ளதால் ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தன் டிரஸ்ட் நிர்வாகிகள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள்.

First published:

Tags: Maharastra, Saibaba, Temple