பஜ்ரங்தள் தடை குறித்த அறிவிப்பு தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது கர்நாடகா காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் பரப்புரை தீவிரமடைந்து வரும் நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த 2ஆம் தேதி மதம், சாதியின் பெயரால் சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் பஜ்ரங்தள் அமைப்பு தடை செய்யப்படும் என காங்கிரஸ் அறிவித்தது.
இதற்கு பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கிழித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்தி பாஜகவினரும் காங்கிரசை கடுமையாக விமர்சித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆய்வு ஒன்று நடத்தியது.
அதில் கர்நாடகாவில் உள்ள மக்கள் தொகையில் 7 சதவீத வாக்களர்களே பஜ்ரங்தள் தடை வாக்குறுதி குறித்து அறிந்துள்ளதாகவும், 10 சதவீத வாக்காளர்கள் மட்டுமே பஜ்ரங்தள் தடை வாக்குறுதி பற்றிய அறிவிப்பை தேர்தல் பிரச்னையாக பார்ப்பதாக தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் கர்நாடக தேர்தல்.. பிரதமர் மோடி , சோனியா காந்தி நாளை பிரச்சாரம்...
இதனால் 4 கடலோர தொகுதிகளில் மட்டும் 1,000 முதல் 1,500 வாக்குகள் வரை குறையும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஜ்ரங்தள் தடை குறித்த தேர்தல் அறிக்கை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Congress, Karnataka Election 2023