முகப்பு /செய்தி /இந்தியா / அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! - பீதியில் மக்கள்!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! - பீதியில் மக்கள்!

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவில் ஏற்கனவே, 4.1 என்ற ரிக்டர் அளவில் அந்தமான் - நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது

  • Last Updated :
  • Chennai, India

அந்தமான் - நிகோபார் தீவுகளில் 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாகவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அந்தமான் தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளத்து.  அதன்படி நிகோபார் தீவு பகுதிகளில் முறையே 5.3, 4.1, 4.9 என்ற ரிக்டர் அளவுகளில் அடுதடுத்து 3 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. மேலும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.  இருப்பினும் தொடர்ச்சியான அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 

First published:

Tags: Earthquake