முகப்பு /செய்தி /இந்தியா / நைட் 10 மணிக்கு மேல் இதெல்லாம் கூடாது... பேச்சுலர்களுக்கு வினோத ரூல்ஸ் போட்ட அபார்ட்மெண்ட் நிர்வாகம்...!

நைட் 10 மணிக்கு மேல் இதெல்லாம் கூடாது... பேச்சுலர்களுக்கு வினோத ரூல்ஸ் போட்ட அபார்ட்மெண்ட் நிர்வாகம்...!

மாதிரி படம்

மாதிரி படம்

  • Last Updated :
  • Karnataka, India

    நாடு முழுவதும் அப்பார்ட்மென்ட்ஸ் பெருகி உள்ளன. முன்பு சிறிய வீடுகள் அதிகம் இருந்த சிறு நகரங்களில் கூட தற்போது அப்பார்ட்மென்ட்ஸ் வந்து விட்டன. சில வீடுகள் மட்டுமே இருக்கும் சிறிய அளவிலான அப்பார்ட்மென்ட், பல நூறு வீடுகள் இருக்கும் நடுத்தர அப்பார்ட்மென்ட், ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கும் மிகப்பெரிய அப்பார்ட்மென்ட்ஸ், தவிர தனித்தனி வீடுகள் அடங்கிய வில்லாக்கள் என பல வகை இடங்களில் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஒவ்வொரு ஹவுசிங் சொசைட்டிஸ் மற்றும் ரெசிடென்ட்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன்ஸ்கள் அதன் குடியிருப்பாளர்களுக்கென தனித்தனி விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை கொண்டுள்ளன. இவற்றில் சில ரூல்ஸ்கள் சற்று விசித்திரமானவையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வினோதமான ரூல்ஸ் ஒன்றை பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம். பெங்களூருவில் உள்ள ஒரு சொஸைட்டி, வாடகைக்கு குடி இருக்கும் பேச்சுலர்ஸ் மற்றும் அதிக வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் பெண்கள் (ஸ்பின்ஸ்டர்ஸ்), இரவு 10 மணிக்கு மேல் தங்கள் வீட்டிற்கு விருந்தினர்களை பிளாட்களில் தங்க வைப்பதற்கு தடை விதித்துள்ளது.

    "இரவு 10 மணிக்கு மேல் பேச்சுலர்ஸ் மற்றும் ஸ்பின்ஸ்டர்ஸ் உள்ளிட்டோரின் ஃபிளாட்ஸ்களுக்கு விருந்தினர்கள் அனுமதி இல்லை. ஏனென்றால் இவர்களின் வீடுகளில் விருந்தினர்கள் இரவில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை" என பெங்களூருவில் உள்ள குண்டனஹள்ளி கேட் பகுதியில் அமைந்துள்ள ஒரு சொசைட்டி குடியிருப்பாளர்களுக்கான தனது வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டு உள்ளது. தனிநபர்களின் சுதந்திரத்தில் தலையிடும் இந்த விசித்திரமான விதியின் தொடர்ச்சியாக, ஒருவேளை பேச்சுலர்கள் அல்லது ஸ்பின்ஸ்டர்களின் வீடுகளில் விருந்தினர்கள் இரவில் தங்க வேண்டிய சூழலை தவிர்க்க முடியவில்லை என்றால் பிளாட் ஓனரிடம் இருந்து இமெயில் மூலம் முன் அனுமதி பெறுமாறு குறிப்பிட்ட சொசைட்டி குறிப்பிட்ட வாடகைதாரகர்களை கேட்டு கொண்டுள்ளது. இந்த தகவலை சோஷியல் மீடியாவில் Reddit யூஸர் ஒருவர் ஷேர் செய்துள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ள அந்த யூஸர், ஒருவேளை பேச்சுலர்ஸ் குடியிருக்கும் பிளாட்களில் விருந்தினர் தங்க வேண்டிய தேவை ஏற்பட்டால், வீட்டு உரிமையாளரிடம் முன் அனுமதி பெறுவதோடு சொசைட்டி மேலாளர் அல்லது அசோசியேஷன் அலுவலகத்தில் தகவலை சொல்லி விருந்தினர்கள் தங்களது அடையாளச் சான்றுகளை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும் என்பதையும் அந்த யூஸர் வெளிப்படுத்தி உள்ளார். இதில் உச்சக்கட்டம் என்னவென்றால் இந்த விதியை மீறி விருந்தினரை தங்கள் வீட்டில் தங்க வைப்பவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் அல்லது சொசைட்டியை விட்டு வெளியேற்றப்படுவர் என்று வழிகாட்டுதலில் கூறப்பட்டிருப்பது தான். குறிப்பிட்ட சொசைட்டி அறிவித்துள்ள பிற விதிகளில் இரவு 10 மணிக்குப் பிறகு மியூசிக் அல்லது பாட்டை சத்தமாக வைக்க கூடாது, நைட் பார்ட்டிக்கு அனுமதி இல்லை, இரவு 10 மணிக்குப் பிறகு மொபைல் பேச காரிடார் மற்றும் பால்கனிகளை பயன்படுத்த கூடாது உள்ளிட்ட பல அடக்கம்.

    இந்த விசித்திர விதிகள் தொடர்பாக Reddit-ல் ஷேர் செய்த குறிப்பிட்ட யூஸரின் போஸ்ட் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், இந்த சொசைட்டியின் ரூல்ஸ் ஹாஸ்டலை விட மோசமாக இருக்கிறது. ஒருவர் ஒரு பிளாட்டில் குடியிருக்க வாடகை பணம் செலுத்துகிறார். ஆனால் அவரது பிளாட்டுக்கு யார் வர வேண்டும், தங்க வேண்டும், பால்கனியில் என்ன செய்ய வேண்டும் என்பது அந்த நபரின் விருப்பத்திற்குட்பட்டது இல்லை என்றால் எப்படி.!. ஆனால் சமீப நாட்களாக பல சொசைட்டி போடும் ரூல்ஸ்கள் மிக அபத்தமாக உள்ளன என காட்டமாக விமர்சித்து வருகின்றனர். இன்னும் பல நெட்டிசன்கள் இந்த ரூல்ஸ்களை குறை கூறி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    First published:

    Tags: Bengaluru