முகப்பு /செய்தி /இந்தியா / பிரதமர் மோடி தான் உண்மையான ’பாஸ்’... ஆஸ்திரேலியா பிரதமர் புகழாரம்...!

பிரதமர் மோடி தான் உண்மையான ’பாஸ்’... ஆஸ்திரேலியா பிரதமர் புகழாரம்...!

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி

பிரதமர் மோடியை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ் ‘பாஸ்’ என்று அழைத்துள்ளார்.

  • Last Updated :
  • interna, IndiaAustraliaAustralia

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டுப் பிரதமர் ’பாஸ்’ என்று அழைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நேற்று பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய வம்சாவளி மக்களைப் பிரதமர் மோடி சிட்னியில் உள்ள பிரமாண்டமான அரங்கில் சந்தித்தார். பிரதமரைக் காண சுமார் 21 ஆயிரம் இந்தியர்கள் அரங்கத்தில் திரண்டு இருந்தனர்.

அந்த அரங்கத்தில் இதற்கு முன்பு அமெரிக்க ‘ராக்’ இசைப்பாடகர் புரூஸ் ஸ்பரிங்ஸ்டீன் இசை நிகழ்ச்சிக்கு தான் இந்தளவு பெரும் கூட்டம் வந்தனர். அதற்குப் பின்னர் அரங்கமே நிரம்பும் அளவு கூட்டம் பிரதமர் மோடியை காண தான் வந்துள்ளனர் என்று அந்நாட்டு பிரதமர் கூறினார். புரூஸ் ஸ்பரிங்ஸ்டீன் ரசிகர்கள், அவரை ‘தி பாஸ்’என்று அழைப்பர். ஆனால் இன்று உண்மையான பாஸ் பிரதமர் மோடி தான் என்று ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

Also Read : கடைகளில் பில் போட செல்போன் நம்பர் கொடுக்க வேண்டாம்... வந்தது அதிரடி உத்தரவு...!

ஜாப்பானில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து, பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, இந்தியா வம்சாவளியினர் அதிகம் வாழும் ஹாரிஸ் பார்க் என்ற பகுதிக்கு லிட்டில் இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டு அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

First published:

Tags: Australia, PM Modi