முகப்பு /செய்தி /இந்தியா / பேக்கரிக்குள் நடுராத்திரி நுழைந்து கேக் வெட்டிய திருடர்கள்.. தேடிப்பிடித்த போலீஸ்!

பேக்கரிக்குள் நடுராத்திரி நுழைந்து கேக் வெட்டிய திருடர்கள்.. தேடிப்பிடித்த போலீஸ்!

பேக்கரியில் திருடியவர்

பேக்கரியில் திருடியவர்

பேக்கரி கடையில் உள்ள பணத்தை திருட வந்த இளைஞர்கள், கேக்கை பார்த்ததும் தங்களுடைய ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அதை வெட்டி சிறப்பாக பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர். 

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு உள்ள இளைஞர்களில் சிலர் உடல் உழைப்பின்றி வாழ வேண்டும், அதுவும் சொகுசாக வாழ வேண்டும் என்ற நினைப்பில் தான் சுற்றித்திரிகிறார்கள். இதற்கு சில இளைஞர்கள் பயன்படுத்தும் வழிகளில் ஒன்று தான் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற பல விஷயங்கள்.  இப்படித் தான் ஒரு பேக்கரி ஒன்றில் திருடச் சென்று இளைஞர்கள் வசமாக போலீசாரிடம் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியோடு நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பேக்கரியில் திருடிய இளைஞர்கள்.. சிக்கியது எப்படி?

அஸ்லாம் மாநிலம் ஜோர்ஹாட் நகர் பகுதியில் மனிஷா என்ற பெயரில் பேக்கரி ஒன்று இயங்கிவருகிறது. வழக்கம் போல வியாபாரம் முடிந்த பின் பேக்கரியை மூடிவிட்டு உரிமையாளர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது தான் இரண்டு திருடர்கள் பேக்கரியின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு விஷேச ஆர்டர்களுக்காக பல வெரைட்டியான கேக்குள் செய்து வைக்கப்பட்டுள்ளது. பேக்கரி கடையில் உள்ள பணத்தை திருட வந்த இளைஞர்கள், இதைப் பார்த்ததும் தங்களுடைய ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அங்கிருந்த கேக்கை வெட்டி சிறப்பாக பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர். இதோடு அவர்களது போன்களிலும் விதவிமான புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். இவ்வாறு திருடர்கள் மேற்கொண்ட அனைத்து விஷயங்களும் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியது அவர்களுக்குத் தெரியவில்லை. இதோடு பேக்கரி கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 ஆயிரம் ரொக்க பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

மறுநாள் வழக்கம் போல கடையைத் திறந்த உரிமையாளர் அதிர்ச்சியாகியுள்ளார். உடனே காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் இவர்கள் இருவரும் ஜோர்ஹாட் நகரில் உள்ள ராயல் சாலையைச் சேர்ந்த கிட்லு கோகோய் மற்றும் சஞ்சய் பட்நாயக் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.மேலும் அவர்களிடம் இருந்து திருட்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போலீசார் இதோடு நின்றுவிடால், இந்த திருடர்கள் இருவரும் கேக்கை கையில் வைத்துக்கொண்டு ஆடியும், ஒருவர் மேல் ஒருவர் கேக்கை தூக்கிப்போட்டுக் கொண்டாடிய தருணத்தின் சிசிடிவி காட்சியை சோசியல் மீடியாவில் பதிவிட்டு ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாய்ஸ்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் உங்களுக்குத் தேவையா? என்றும் சிறையில் ஜாலியாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுங்கள் என்பது போன்ற பல கமெண்ட்ஸ்களை பதிவிட்டுள்ளனர். முன்னதாக இந்த திருடர்கள் இருவரும் பேக்கரியில் மட்டுமில்லாது, அருகில் இருந்த மெடிக்கல் கடையிலும் திருட்டில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Assam