அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் கோவிட்-19 பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. எனவே, அங்கு குறிப்பிட்ட சில பிரிவினர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கேரளாவில் 1,801 நபர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, கேரளாவில் உள்ள பொதுவெளிகளில் நாள்பட்ட நோய் பாதிப்பு கொண்டவர்கள், மூத்த குடிமக்கள், கர்பிணிகள், குழந்தைகள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மேற்கண்டவர்கள் சோப் போட்டு கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மாநிலத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படுவதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் காலை 7.30-க்கே அலுவலகம் வர வேண்டும்.. பஞ்சாப் அரசு உத்தரவு.. காரணம் இதுதான்!
அதேவேளை, மருத்துவ சிகிச்சையில் இருக்கும் 1.2 சதவீதம் பேர் தான் ஐசியு சிகிச்சை பெறுவதாகவும், 0.8 சதவீதம் பேருக்கு தான் ஆக்சிஜன் தேவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் அதிக அளவிலான பாதிப்புக்கள் எர்ணாக்குளம், திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவைப் போலவே பாதிப்பு அதிகம் காணப்படும் புதுச்சேரி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Mask, Covid-19, Kerala, Mask