முகப்பு /செய்தி /இந்தியா / பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்... புறக்கணிக்கும் முதலமைச்சர்கள்...

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்... புறக்கணிக்கும் முதலமைச்சர்கள்...

நிதி ஆயோக்

நிதி ஆயோக்

கூட்டாட்சி தத்துவம் கேலி கூத்தாகும் சூழலில், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பி கூட்டத்தை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர்ராவ், மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளனர்.

மத்திய திட்டக்குழுவிற்கு மாற்றாக பாஜக அரசு நிதி ஆயோக் அமைப்பை கொண்டுவந்தது. இதன் தலைவராக பிரதமரும், உறுப்பினர்களாக அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும் உள்ளனர்.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தை புறக்கணிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ’கூட்டாட்சி தத்துவம் கேலி கூத்தாகும் சூழலில், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிரதமரே கீழ்படியவில்லை என்றால், நீதி கோரி பொதுமக்கள் எங்கு செல்வார்கள் என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க : புதிய நாடாளுமன்றத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் - பிரதமர் மோடி வெளியிட்டார்

இதனிடையே நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதலமைச்சர் பஞ்சாப் முதலமைச்சர், தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

top videos

    மேலும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவை இன்று ஹைதராபாத்தில் சந்திக்கும் கெஜ்ரிவால், டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆதரவு கோருகிறார்.

    First published:

    Tags: Arvind Kejriwal, Chandrashekar Rao, Niti Aayog, PM Narendra Modi