முகப்பு /செய்தி /இந்தியா / ஆற்றில் நொறுங்கி விழுந்த ராணுவ ஹெலிகாப்டர்.. தண்ணீர் மிதந்த பாகங்கள்.. அதிர்ச்சியான பொதுமக்கள்!

ஆற்றில் நொறுங்கி விழுந்த ராணுவ ஹெலிகாப்டர்.. தண்ணீர் மிதந்த பாகங்கள்.. அதிர்ச்சியான பொதுமக்கள்!

ராணுவ ஹெலிக்காப்டர் விபத்து

ராணுவ ஹெலிக்காப்டர் விபத்து

ஜம்மு காஷ்மீரில் 3 ராணுவ அதிகாரிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

  • Last Updated :
  • Jammu and Kashmir, India

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பறந்து கொண்டிருந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தின் எச்ஏஎல் துர்வ் ரக ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலை கிஸ்த்வார் மாவட்ட பகுதியில் பறந்து கொண்டிருந்தது.

விமானத்தில் மூன்று அதிகாரிகள் பயணித்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் அங்கு ஓடிக்கொண்டிருந்த மருசுதார் நதியில் அடித்துச் செல்லப்பட்டது.

நதியில் விமான பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ராணுவத்திற்கு விபத்து குறித்து தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ராணுவம் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகள் மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து கூடுதல் தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: விவகாரத்து வழக்கிற்கு இனி 6 மாத கால காத்திருப்பு கட்டாயமில்லை... உச்சநீதிமன்றம் அதிரடி

சமீப காலமாகவே ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. கடந்த இரு மாதங்களில் துர்வ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும். கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று சீட்டா ரக ஹெலிகாப்டர் அருணாசலப் பிரதேசத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கர்னல் வினய் பானு ரெட்டி, மேஜர் ஜெயந்தா என்ற இரு ராணுவ விமானிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக ராணுவ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

top videos
    First published:

    Tags: Helicopter Crash, Indian army, Jammu and Kashmir