முகப்பு /செய்தி /இந்தியா / தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 வயது சிறுமி பலி.. மீண்டும் கோர சம்பவம்!

தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 வயது சிறுமி பலி.. மீண்டும் கோர சம்பவம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வீட்டை விட்டு வெளியே சென்ற 5 வயது சிறுமி தெரு நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் சத்தீஸ்கரில் நிகழ்ந்துள்ளது.

  • Last Updated :
  • Chhattisgarh, India

தெரு நாய் தொல்லைகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் பலரும் பாதிக்கப்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதில் சில நிகழ்வுகளில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டத்தில் பய்குந்த்பூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் அஜய் மாஜி. செங்கல் சூளையில் வேலை செய்து வரும் இவருக்கு சுகந்தி என்ற 5 வயது மகள் இருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணி அளவில் சிறுமி சுகந்தி இயற்கை உபாதை கழிக்க வீட்டை விட்டு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் சிறுமியை சூழ்ந்து கொண்டு தாக்கி கடுமையாக கடித்துள்ளன. இதில் சிறுமி கடுமையான காயங்களுக்கு ஆளான நிலையில், தகவல் அறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், தெரு நாய் தொல்லைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் காதலியை பழிவாங்க திருமண பரிசில் வெடிகுண்டு வைத்த நபர்... புது மாப்பிள்ளை பலியான பகீர் சம்பவம்!

நாடு முழுவதும் இது போன்ற சம்பவங்கள் சமீப காலத்தில் அதிகம் காணப்படுகின்றன. கடந்த மாதம் 10ஆம் தேதி அன்று டெல்லியில் 5 மற்றும் 7 வயது சிறுவர்கள் தெரு நாய்கள் கடிக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

top videos
    First published:

    Tags: Chhattisgarh, Dog