முகப்பு /செய்தி /இந்தியா / டெல்லியில் தொடர்ந்து 2வது நாளாக தொடர்ந்து நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி!

டெல்லியில் தொடர்ந்து 2வது நாளாக தொடர்ந்து நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி!

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

நேற்றிரவு ஆப்கானிஸ்தான் பைசாபாத் பகுதியில் இருந்து  133 கி.மீக்கு தொலைவில் உள்ள பகுதியில்  6.5 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது

  • Last Updated :
  • New Delhi, India

Delhi Earthquakes : தொடர்ந்து இரண்டாவது நாளாக டெல்லியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.7  ஆக பதிவானது.

முன்னதாக, நேற்றிரவு ஆப்கானிஸ்தான் பைசாபாத் பகுதியில் இருந்து  133 கி.மீக்கு தொலைவில் உள்ள பகுதியில்  6.5 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. பூமிக்கு கீழே சுமார் 156 கிலோமீட்டர் தொலைவுக்கு உருவான இந்த நிலநடுக்கம், இந்திய, பாகிஸ்தான் மட்டுமல்லாது சீனா, துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற நாடுகளிலும்  உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரையில், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனையடுத்து பீதியில் வீடுகளை விட்டு வெளியே ஓடிய மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதனிடையே டெல்லியில் தற்போது மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Earthquake