புதிதாக திறக்கப்படும் நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் வைக்கப்படுவதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா தனது 75ஆவது சுதந்திர ஆண்டை நிறைவுசெய்த சூழலில் அதனை இன்னும் சிறப்பாக்கும் வகையில் டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கும் நிகழ்ச்சி அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்பட்ட செங்கோல் இடம் பெறும் என கூறினார். சுதந்திரத்தின் அடையாளமாக தமிழ்நாட்டில் தயாரான செங்கோலை மவுண்ட் பேட்டன் நேருவிடம் வழங்கியது பற்றி பிரதமர் மோடி கேள்விப்பட்டதாக அமித் ஷா தெரிவித்தார். அந்த தங்க செங்கோலை சோழர்கள் கால நடைமுறையின்படி புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில், ‘நமது நாடு சுதந்திரமடைந்த போது, ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில், “வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்” என்ற தேவார திருப்பதிகத்தைப் பாடி, தமிழகத்தைச் சேர்ந்த அருள்மிகு திருவாவடுதுறை ஆதீனம், பண்டித நேருவிடம் சோழ மன்னர்கள் பயன்படுத்தியதைப் போன்ற செங்கோலை வழங்கினார்.
தமிழ் மன்னர்கள் ஆட்சியின் முக்கிய அங்கமாக விளங்கிய செங்கோலின் முக்கியத்துவம் குறித்து இன்றைய செய்தியாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விரிவாக எடுத்துரைத்தார்.
ஆனால், அதற்குப் பிறகு, அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்ட செங்கோல், தற்போது பிரதமர் நரேந்திர மோடியின், நமது பாரத கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியால், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவின் போது, நமது பிரதமர் அவர்களுக்கு, சோழர் காலத்துச் செங்கோல் வழங்கப்படவிருக்கிறது. புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை அலங்கரிக்கும் வகையில் இந்த செங்கோல் இடம்பெறும்.
நமது நாடு சுதந்திரமடைந்த போது, ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில், “வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்” என்ற தேவார திருப்பதிகத்தைப் பாடி, தமிழகத்தைச் சேர்ந்த அருள்மிகு திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள், பண்டித நேரு அவர்களிடம் சோழ மன்னர்கள் பயன்படுத்தியதைப்… pic.twitter.com/9wqZfxbgLe
— K.Annamalai (@annamalai_k) May 24, 2023
தமிழ்க் கலாச்சாரத்தைத் தேசிய அரங்கில் மீட்டெடுத்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என பதிவிட்டிருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Central Vista, PM Narendra Modi