முகப்பு /செய்தி /இந்தியா / அபூர்வமான மண்டலா ஓவியங்கள் வரைவதையே தொழிலாக கொண்டுள்ள ஆந்திரப் பெண்!

அபூர்வமான மண்டலா ஓவியங்கள் வரைவதையே தொழிலாக கொண்டுள்ள ஆந்திரப் பெண்!

மண்டலா ஓவியம்

மண்டலா ஓவியம்

ஆந்திராவில் வசிக்கும் இந்த பெண்மணி மண்டலா என்னும் அறிய ஓவியக் கலையில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கிறார்.

  • Last Updated :
  • Chennai, India

நமது இந்திய நாட்டில் பல்வேறு திறமைகளை கொண்ட பலவிதமான மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெரும்பாலும் மற்றவரால் செய்ய முடியாத சில அரிய கலைகளை செய்யக்கூடிய மக்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனர். அனைவருக்குமே தங்களுக்குப் பிடித்த வேலையை தொழிலாக செய்யும் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. ஆனால், குண்டூரில் வசிக்கும் சேத்தலா என்ற பெண் மற்றவர்களைப் போல் அல்லாமல் தான் மிகவும் விரும்பும் ஒரு வேலையை தனது முழு நேர தொழிலாக மாற்றிக் கொண்டுள்ளார்.

ஆந்திராவில் வசிக்கும் இந்த பெண்மணி மண்டலா என்னும் அறிய ஓவியக் கலையில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கிறார். மண்டலா என்பது சமஸ்கிருதம் மொழியில் வட்டம் என்று பொருள்படும். இந்து மதம் மற்றும் புத்த மதத்தில் இவை மிகவும் பிரபலமானவை. இன்னும் சொல்லப்போனால் மண்டலா என்பது கிட்டத்தட்ட ஒரு வடிவியல் முறையில் அமைக்கப்படும் ஒரு ஓவியம் என்று கூட கூறலாம். மேலும் இவை பிரபஞ்சத்தின் குறியீடுகளாகவும் கடவுள்களையும், கடவுள்களின் ஆற்றல்களை தொடர்பு கொள்ள உதவும் குறியீடுகளாகவும் இன்று வரை பலரால் நம்பப்படுகின்றன.

புத்த மதத்தினர் இடையே இந்த மண்டல ஓவியங்கள் மிகவும் பிரபலமானவை. மேலும் இந்து மக்கள் அதிகம் வசிக்கும் இந்திய துணை கண்டத்திலும் இந்த மண்டலா ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றவைகளாக  இருந்துள்ளன. இதைத் தவிர மாயன்கள், ஐரோப்பிய கத்தோலிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள் போன்றவர்களும் விதவிதமான வடிவங்கள் இந்த மண்டலா ஓவியங்களை பயன்படுத்தி உள்ளனர்.

ஆந்திராவில் வசிக்கும் சேத்தனா என்ற பெண்மணி தனது குழந்தை பருவம் முதலே ஓவியங்களை அதிக ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார். தனது வீட்டில் சுவர்களில் உள்ள வடிவங்களை படி எடுத்து அவற்றை வரைவதை இளம் வயதிலேயே செய்து வந்துள்ளார். இந்த பெண்மணியின் திறமையை பார்த்த அவரது பெற்றோர் ஒரு கலைப் பள்ளியில் அவரை சேர்த்து ஓவியம் வரைவது ஊக்கப்படுத்தி உள்ளனர். இரண்டு வருடம் வரை அந்த பள்ளி படித்த அவர் மண்டலா ஓவியக் கலையில் ஆர்வம்கொண்டுள்ளார்.

தற்போது அபாகஸ் மற்றும் வேத கணித பயிற்சியாளராக இவர் வேலை செய்து வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். பல்வேறு ஒர்க்ஷாப்புகளிலும் நடத்தியுள்ளார். “சேவ் ஸ்பேரோ” என்ற மண்டல ஓவியத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒர்க்ஷாப்புகளை இவர் நடத்தி வருகிறார். இவை அனைத்தும் முழுக்க முழுக்க இலவசமானது ஆகும். மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட “சலாம் இந்தியா ஆர்ட் ஈவன்ட்” நிகழ்ச்சியில் சேத்தனாவின் ஓவியங்கள் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்தன. இவரது பெரும்பாலான மண்டலா ஓவியங்களை மக்கள் விருப்பத்துடன் வாங்கி சென்றனர்.

top videos

    இந்த மண்டலா ஓவியங்கள் இந்து மதத்திலும், புத்த மதத்திலும் யந்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது யந்திரங்கள் என்பவை ஒரு சதுர வடிவ தட்டில் இரண்டு புறமும் நடுவே வட்டம் போன்று வரைந்து உருவாக்கப்படுபவை. மேலும் இந்துக் கடவுள்கள் வசிக்கும் இடமாகவும் அது கருதப்படுகிறது.

    First published:

    Tags: Painting, Women Empower