வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் எதிர்பாரத நேரத்தில் கைகொடுத்து சிக்கலில் இருப்பவர்களை காக்கும் செய்திகளை நாம் பார்த்திருப்போம். அத்தகைய சம்பவம் ஒன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரக்காண்ட் மாநிலத்தில் பிரசித்த பெற்ற கேதர்நாத் ஆலயம் உள்ளது. இதற்கு இந்தியா முழுவதில் இருந்தும் பக்தர்கள் சுற்றுலா வருவதுண்டு. அப்படி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த செவ்வாய்கிழமை கேதர்நாத் வந்துள்ளது. அந்த நேரம் பார்த்து அங்கு மோசமான வானிலை நிலவியதைத் தொடர்ந்து அந்த குடும்பத்தைச் சேர்ந்த 68 வயது முதிய பெண் மட்டும் பிரிந்து தனியாக தொலைந்து விட்டார்.
தனது குடும்பத்தினரை பிரிந்த அந்த மூதாட்டிக்கு தெலுங்கை தவிர இந்தியோ ஆங்கிலமோ தெரியவில்லை. இந்நிலையில், எவ்வாறு தடுமாறி கவுரிகுண்ட் என்ற பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு வந்துவிட்டார் அந்த முதிய பெண். காவலர்கள் பெண்ணை ஆசுவாசபடுத்தி அமரவைத்து பேச்சு கொடுத்துள்ளனர்.
மொழி பிரச்சனையால் அவர்களால் முறையாக பேசமுடியாத நிலையில், சமயோஜித யோசனையாக காவலர்கள் தொழில்நுட்ப வசதியை நாடியுள்ளனர். கூகுள் ட்ரான்ஸ்லேட் எனப்படும் கூகுள் மொழிபெயர்பு கருவி வசதிகொண்டு முதிய பெண் கூறுவதை புரிந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆண்களே உஷார்.. பெண்ணுடன் பைக்கில் பயணம்.. மனைவிக்கு போன மெசேஜ் - சிசிடிவியால் சிக்கிய கணவன்
அதைத்தொடர்ந்து பெண் கூறியதை வைத்து குடும்பத்தாரை தொடர்பு கொண்டனர். அதற்குள்ளாக குடும்பத்தார் சோன்பிரயாக் என்ற பகுதிக்கு சென்ற நிலையில், காவல்துறையினர் தனி வாகனம் வைத்து முதிய பெண்ணை அழைத்து சென்று குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர். மொழி தெரியாத பிராந்தியத்தில் சிக்கிய முதிய பெண்ணுக்கு கூகுள் கைகொடுத்த இந்த சம்பவம் இணையத்தில் வேகமாக வைராலகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google, Uttarkhand