முகப்பு /செய்தி /இந்தியா / தெலுங்கு வருடப்பிறப்பு.. வாழ்த்து தெரிவித்த ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா..!

தெலுங்கு வருடப்பிறப்பு.. வாழ்த்து தெரிவித்த ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா..!

அமைச்சர் ரோஜா

அமைச்சர் ரோஜா

யுகாதி பண்டிகைக்கு ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திர மாநிலத்தில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் மந்திரி ரோஜா, தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதிக்கு மக்களுக்கு வாழ்ந்து தெரிவித்துள்ளார்.

ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினமாக யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. யுகத்தின் ஆரம்பம் இந்தநாளில்தான் தொடங்கியது என்பதால், `யுகாதி’ என்ற பெயர் ஏற்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

top videos

    இத்திருநாளுக்கு ஆந்திர மாநிலத்தின் அமைச்சரும் பிரபல நடிகையுமான ரோஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த புத்தாண்டு உங்களுக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியை வழங்கட்டும், நல்ல ஆரோக்கியம் மற்றும் செல்வங்களுடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்” என்று யுகாதி வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Actress Roja, Andhra Pradesh