முகப்பு /செய்தி /இந்தியா / ஆண்மை பரிசோதனை செய்த குடும்பம்... ஆத்திரத்தில் மனைவி, மாமியாரை குத்திகொன்ற புதுமாப்பிள்ளை!

ஆண்மை பரிசோதனை செய்த குடும்பம்... ஆத்திரத்தில் மனைவி, மாமியாரை குத்திகொன்ற புதுமாப்பிள்ளை!

மாதிரி படம்

மாதிரி படம்

Thirupathi Crime news | முதலிரவில் மனைவியை தொடாமல் தூங்கியதால் அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் குடும்பத்தார் புதுமாப்பிள்ளையை அழைத்து சென்று ஆண்மை பரிசோதனை செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திராவில் முதலிரவு அறையில் மனைவியை தொடாமல் தூங்கியதால் ஆண்மை பரிசோதனை செய்ய கோரப்பட்டதால் ஆத்திரமடைந்த புதுமாப்பிள்ளை மனைவியையும், மாமியாரையும் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சென்னம்மா சர்க்கிள் பகுதியில் வசித்து வந்தவர் பிரசாத் . இவர் மனைவி கிருஷ்ணவேணி . தம்பதியின் மகன் சரவணன் பி. டெக் படித்து முடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக ஹைதராபாத் தனியார் நிறுவனத்தில் சரவணனுக்கு வேலை கிடைத்திருக்கிறது. இதன் பின்னர் சரவணனுக்கும் தெலுங்கானா மாநிலம் வனப்பர்த்தி பகுதியை சேர்ந்த ருக்மணி என்ற இளம் பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கடந்த 1ஆம் தேதி தான் திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் முதல் இரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலிரவு அறையில் தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்திருக்கிறார் சரவணன். இரண்டு நாட்களாக இப்படியே இருந்திருக்கிறார். இதைப்பற்றி ருக்மணி தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார் .

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சரவணனை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆண்மை பரிசோதனை செய்திருக்கிறார்கள். பின்னர் திருமணம் ஆகி இரண்டு நாட்களாகியும் தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார் என்று சரவணன் பற்றி அக்கம் பக்கத்தில் குறை சொல்லி இருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டு ஆத்திரமடைந்த சரவணன் பெற்றோருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

தன் மகனை அவமானப்படுத்திய குடும்பத்தை கொலை செய்ய வேண்டும் என்று சரவணனின் தந்தை பிரசாத் திட்டம் தீட்டியிருக்கிறார். அதை அடுத்து கர்னூலில் உள்ள தங்கள் வீட்டிற்கு வரும்படி எல்லோரையும் அழைத்து இருக்கிறார். அதன்படி ருக்மணியும், சரவணனும் அங்கு சென்று இருக்கிறார்கள். அவர்களுடன் ருக்மணியின் தந்தை வெங்கடேஸ்வரலுவும் தாய் ரமாதேவியும் சென்று இருக்கிறார்கள்.

வீட்டிற்கு சென்றதும் சரவணன் தன் மனைவி ருக்மணியை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றிருக்கிறார். அங்கே மாடியில் உள்ள அறையில் சரமாரி வெட்டி கொலை செய்திருக்கிறார்.

அந்த நேரத்தில் வீட்டின் கீழ் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த ருக்மணியின் தந்தை வெங்கடேஸ்வரலு அவரின் மனைவி ரமாதேவி ஆகியோரை சரவணனின் தந்தை பிரசாத், கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் வெங்கடேஸ்வரலு கத்தி குத்து காயங்களுடன் வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓடி இருக்கிறார். அவரது மனைவி வெளியே ஓட முடியாமல் வீட்டிலேயே சிக்கி கொண்டிருக்கிறார். அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார் பிரசாத்.

அதற்குள் வெளியே ஓடிய வெங்கடேஸ்வரலு போட்ட அலறல் சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்க, போலீசார் விரைந்து வந்து சரவணன் மற்றும் அவரது தந்தை பிரசாத்தை கைது செய்தனர். திருமணம் நடந்த இரண்டே வாரத்தில் மனைவி , மாமியாரை தந்தையுடன் சேர்ந்து வங்கி ஊழியர் கொலை செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவத்தில் தப்பி ஓடி தலை விரைவாக இருந்த சரவணன் அவருடைய தந்தை பிரசாத், தாய் கிருஷ்ணவேணி ஆகியோரை இன்று போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி.

First published:

Tags: Andhra Pradesh, Crime News, Tirupathi