ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சந்திரமௌலி மிகவும் கொடூரமான ஒரு விபத்தை சந்தித்ததன் காரணமாக, அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனை ஒரு காரணமாக கருதாமல் விடாமுயற்சியுடன் போராடிய அந்த இளைஞர் ஐஐடி அகமதாபாத்தில் இடம்பெற்று பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
எதிர்காலத்தில் ஒரு மேலாளர் ஆவதே தனது குறிக்கோள் என்கிறார் இவர். ஆந்திர மாநிலத்தில் உள்ள அனக்கா பள்ளி மாவட்டத்தில் ரவிக்காமதம் மண்டலத்தைச் சேர்ந்த கொத்தாகொட்டா கிராமத்தை சேர்ந்தவர் சந்திர மௌலி. இவர் தனது குடும்பத்தோடு அதே மாவட்டத்தில் உள்ள நர்சிபட்டினம் மண்டலத்தைச் சேர்ந்த பெத்தா போடப்பள்ளி கிராமத்திற்கு இடம் பெயர்ந்தார். இவரது தந்தை வெங்கட ரமணா சிறு தொழில் செய்பவர். இவரது தாயார் செயின்ட் ஆன்ஸ் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சந்திரமௌலி தனது பெற்றோரின் உதவியுடன், விடாமுயற்சியும் தைரியமும் கொண்டு தனது B.Tech படிப்பை முடித்தார். எனினும் விதி யாரை விட்டது. ஒருநாள் தனது GATE பரிட்சைக்கு தயார் செய்து கொண்டிருக்கும்போது, இரும்பு ஷீட்டுகளால் ஆன ஷெட்டின் மீது விழுந்த ஒரு வளையத்தை எடுக்க முயன்றார்.
அப்போது சந்திரமௌலி தவறுதலாக மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் வயரை தொட்டுவிட்டார். இதனால் இவரை மின்சாரம் தாக்கியது. இந்த மோசமான விபத்திற்கு பிறகு அவரது இரு கைகள் மற்றும் கால்கள் செயலிழந்து போனது. மேலும் ஒரு சிகிச்சையின்போது இவரது கைகள் மற்றும் கால்கள் அகற்றப்பட்டது. இப்படிப்பட்ட மோசமான சம்பவத்திற்கு பிறகு அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார். எனினும், அவரது நண்பர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்து, அவரது தன்னம்பிக்கையை ஊக்குவித்து, அவர் அனுபவித்து வந்த மனப்போராட்டங்களை எதிர்த்து செயல்பட இவருக்கு ஆதரவாக இருந்தனர்.
"விபத்திற்கு பிறகு 2 மாதங்கள் என்னால் எந்த ஒரு செயலையும் செய்ய முடியவில்லை. மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற எனது கனவை தூக்கி எறிந்து விட்டு, LLB பயின்று நீதிபதியாக வேண்டும் என்று முடிவெடுத்தேன். எனினும் நீதிபதி ஆவதற்கு ஒரு கையாவது தேவைப்படும் என்ற காரணத்தால் அந்த கனவையும் கைவிட வேண்டி இருந்தது." என்றார் சந்திரமௌலி.
அவருக்கு தடையாக வந்த அனைத்தையும் தகர்த்து எறிந்து விட்டு தனது திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை பயன்படுத்துவதற்கான நுட்பங்களை அறிந்தார். தற்போது அவர் அமேசான் நிறுவனத்திற்கு வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வருகிறார். இவரது கதை நிச்சயமாக பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.