முகப்பு /செய்தி /இந்தியா / நீடா அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழா... கருப்பு நிற உடையில் வசீகரித்த ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஜோடி..!

நீடா அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழா... கருப்பு நிற உடையில் வசீகரித்த ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஜோடி..!

விழாவில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் உடைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

விழாவில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் உடைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

விழாவில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் உடைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் மையத்தில் நீடா முகேஷ் அம்பானியின் கல்சுரல் சென்டரின் பிரமாண்டமான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இது நீடா அம்பானியின் கனவுத் திட்டம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து 3 நாட்கள் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.

இந்த கலாச்சார மையம் குறித்து நீடா அம்பானி தெரிவித்ததாவது,  “இந்த கலாச்சார மையம் இந்தியாவின் சிறந்த விஷயங்களை உலகிற்குக் காண்பிக்கவும் உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு வரவேற்பதற்கான ஒரு இடமாகவும் இருக்கும்” என்று பேசினார்.

இந்த விழாவில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், திரைத்துறை பிரபலங்கள் ஆமிர் கான், ஆலியா பட், வித்யா பாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)விழாவில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் உடைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. ஆனந்த் அம்பானி குர்தா, பைஜாமாவும் கலந்த கருப்பு நிற உடையணிந்திருந்தார். அவருடன் வந்த ராதிகா மெர்ச்சன்ட் கருப்பு நிற சேலையில் மிக அழகாக வந்திருந்தார்.

First published:

Tags: Nita Ambani, Reliance Foundation