முகப்பு /செய்தி /இந்தியா / 65 ஆயிரம் சதுரடி... 11 அடுக்குமாடி... பிரமிக்க வைக்கும் தெலுங்கானா தலைமை செயலக கட்டடம்!

65 ஆயிரம் சதுரடி... 11 அடுக்குமாடி... பிரமிக்க வைக்கும் தெலுங்கானா தலைமை செயலக கட்டடம்!

தெலுங்கானா தலைமை செயலக கட்டிடம்

தெலுங்கானா தலைமை செயலக கட்டிடம்

Telangana Secretariat Building | இந்த செயலகக் கட்டடம் இந்தோ- பாரசீக – அரேபிய கட்டக்கலையின் ஒருங்கிணைந்த பாணிக்கு ஒரு சின்னமாக இருந்தது. மேலும் ஹுசைன் சாகர் கரையில் உள்ள பழங்கால அரண்மனைகள் மற்றும் கோவில்களின் குவிமாடங்களைக் காணக்கூடிய வகையிலும் இந்த கட்டடக்கலை அமைந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Telangana, India

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கட்டடக்கலைகளும் ஒவ்வொரு விதமான பிரம்மிப்பைத் தான் நம் கண்முன்னே கொண்டு வரும். இந்த வரிசையில் தெலுங்கானாவில் உயர்ந்து நிற்கிறது இம்மாநிலத்தின் தலைமை செயலகம். ஹைதராபாத் ஹுசைன் சாகர் அருகே 64,989 சதுர அடியில் 11 அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சிறப்புகள் நிறைந்த இந்த கட்டடத்தில் அழகான மற்றும் கட்டடக்கலை அதிசயங்கள் கலந்த நவீன வசதிகளுடன் முற்றிலும் நம்மை பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதோடு பல கட்டடக்கலை அம்சங்களும் இதில் அடங்கியுள்ள நிலையில், என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தெலுங்கானா தலைமை செயலகத்தின் சிறப்பு:

தெலுங்கானா தலைமைச் செயலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2019 ஆம் ஜூன் 17 ல் நடைபெற்றது. முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் கூறிய வார்த்தைகளைப் பிரதிபலிக்கும் வகையில், தெலுங்கானா தலைமை செயலகத்தை பாரம்பரியம் மற்றும் கட்டடக்கலையின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலகக் கட்டடம் இந்தோ- பாரசீக – அரேபிய கட்டக்கலையின் ஒருங்கிணைந்த பாணிக்கு ஒரு சின்னமாக இருந்தது. மேலும் ஹுசைன் சாகர் கரையில் உள்ள பழங்கால அரண்மனைகள் மற்றும் கோவில்களின் குவிமாடங்களைக் காணக்கூடிய வகையிலும் இந்த கட்டடக்கலை அமைந்துள்ளது.

கட்டடத்தின் பிரதான நுழைவாயிலில் பிரபலமான செரியல் ஓவியங்களை ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறைப்படி முடிவு செய்துள்ளனர். இங்கு 34 குவிமாடங்களும், நான்கு சிங்கங்களின் இரண்டு தேசிய சின்னங்களும் வட்ட வடிவில் பொருத்தப்பட்டிருக்கும் கிரீடத்தில் உள்ள நகைகள் போல் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இரண்டு குவிமாடங்களில் ஒரு குவிமாடம் செயலகத்தின் முன் கட்டப்பட்டது மற்றும் இரண்டாவது கட்டட வளாகத்தின் பின்புறம் கட்டப்பட்டது.

Also see... ஷீரடி கோயிலுக்கு காணிக்கையாக கிடைக்கும் நாணயங்களை ஏற்க மறுக்கும் வங்கிகள்.! என்ன காரணம்.?

கட்டடக்கலையின் சாதனை: கட்டடக்கலை நிபுணர்களின் கூற்றுப்படி, அரண்மனை வடிவமைப்பில் ஒரு கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க வேண்டும் என்றால், நான்கு ஆண்டுகளுக்கு மேலாகும். ஆனால் தெலுங்கானாவில் முதல்வர் கே.சி.ஆர் அடிக்கல் நாட்டிய நாளிலிருந்து 26 மாதங்களில் கட்டி முடித்து சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கட்டட வளாகம் தொடர்பான பல்வேறு வடிவமைப்புகளுக்கு வடிவம் கொடுப்பதிலும் பல மணி நேரம் செலவிட்டுள்ளனர் கட்டடக்கலை நிபுணர்கள். மேலும் கட்டடக் கலைஞர்கள் மற்றும் பொறியாளர்களுடன் பல விவாதங்களுக்குப் பிறகு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

மேலும் கட்டுமானப் பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டடத் துறை அமைச்சர் பிரசாந்த் ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிவில் இன்ஜினியராக இருந்த அவர், செயலகத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் கட்டுமானப் பணிகளை முடித்தார். இவ்வாறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பல கட்டடக்கலை நிபுணர்களின் அயராத உழைப்பின் கிடைத்த பலனாய் தான் இந்த கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

Also see... 'மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்..’ - அம்பாஜி கோயிலின் கண்ணாடிப் பாலம் பற்றி தெரியுமா?

top videos

    இந்த தலைமை செயலக வளாகத்தின் கட்டடக் கலைஞர்களின் கூற்றுப்படி, தெலுங்கானாவின் கலாச்சார பொக்கிஷம் மற்றும் அமைதியான வாழ்க்கை முறை ஆகியவை செயலகத்தின் கட்டடக்கலையில் இரண்டு கட்ட உத்வேகமாக இருக்கும். மேலும் நிஜாமாபாத்தில் உள்ள காகிதாயா வம்சத்தின் நீலகண்டேஸ்வர ஸ்வாமி கோயில் மற்றும் வனபர்த்தியில் உள்ள அரண்மனைகளின் கட்டடக்கலை பாணியிலிருந்து ஈர்க்கப்பட்டு அதற்கேற்ப செயலகத்தின் குவிமாடங்களைக் கட்டியுள்ளதுதான் இந்த தலைமை செயலகத்தின் சிறப்பாக உள்ளது.

    First published:

    Tags: Buildings, Telangana